People returning to Chennai - Ulundurpet stalled Photograph: (Ulundurpet)
சுதந்திர தினம் மற்றும் கிருஷ்ண ஜெயந்தி என தொடர்ச்சியாக மூன்று நாட்கள் விடுமுறை இருந்ததால் சென்னையில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு பொதுமக்கள் சொந்த ஊருக்குச் சென்றிருந்தனர்.
இந்நிலையில் திருச்சி, மதுரை, நாகர்கோவில், கன்னியாகுமரி, சேலம், ஈரோடு, கோவை, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து மீண்டும் மக்கள் சென்னை திரும்பி வருவதால் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்பதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி உள்ளனர் .தொடர்ந்து போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்துவதற்காக போக்குவரத்து காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.