ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்கா காவல் நிலையத்தில் உட்பட்ட சின்ன மாயா குளம் கிராமத்தில் சிஎஸ்ஐ சர்ச் அருகில் வசிக்கும் கிறிஸ்டி என்ற முனீஸ்வரி தனது மகள் மருமகளுடன் சேர்ந்து மது பாட்டில்களை விற்பனை செய்து வருவதாகவும் அங்கே மது வாங்க வரும் இளைஞர்கள் மாணவர்கள் இரவிலும் பகலிலும் மது அருந்திவிட்டு கும்பலாக சில இடங்களில் அமர்ந்து அந்தப் பகுதியில் செல்லும் பெண்களை தகாத வார்த்தைகளால் பேசி கூச்சலிடுகின்றனர் இதனால் அந்தப் பகுதி பெண்கள் மற்ற கடைகளுக்கு வெளியில் செல்வதற்கு அச்சமடைந்து வருவதாக சொல்லப்படுகிறது.
மேலும் வெளியூரிலிருந்து நிறைய நபர்கள் இங்கு வந்து மது வாங்கி அருந்திவிட்டு அரை நிர்வாண கோலத்திலும் கிடக்கின்றனர். கள்ள மது விற்பனை செய்பவர்கள் மீது காவல்துறையினர் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சின்ன மாயாகுளம் பகுதியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் ஆண்கள் ஏர்வாடி காவல் நிலையத்தை முற்றுகையிட்டு புகார் மனு அளித்துள்ளனர். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பும் சலசலப்பும் நிலவியிருக்கிறது.
Follow Us