மூன்றாவது பிரசவத்துக்குப் பேறுகால விடுப்பு வழங்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பணியாற்றும் பி. மங்கையர்க்கரசி என்பவர் வழக்கு ஒன்றைத் தொடர்ந்திருந்தார். இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த  நீதிபதிகள் ஆர். சுரேஷ் குமார் மற்றும் சமீம் அகமது ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. 

Advertisment

அப்போது, “பேறுகால விடுப்பு தொடர்பான தமிழக அரசின்  அடிப்படை விதியில் மூன்றாவது பிரசவத்திற்குப் பேறுகால விடுப்பு வழங்க முடியாது என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் மூன்றாவது பிரசவத்திற்கு பேறுகால விடுப்பு வழங்கவேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மூன்றாவது பிரசவத்திற்குப் பேறுகால விடுப்பு வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது எனவே மனுதாரருக்கு உரியப் பணப் பலன்களுடன் ஓராண்டு விடுப்பு வழங்க வேண்டும்” என உயர்நீதிமன்ற பதிவாளருக்கு உத்தரவிட்டது. 

Advertisment

மேலும், “இனிமேல் பேறுகால விடுப்பு கோரி வழக்குகள் வராத வகையில் இந்த உத்தரவு குறித்து அனைத்து மாவட்ட நீதிமன்ற பதிவாளர்கள் மற்றும் அதிகாரிகளுக்குச் சுற்றறிக்கை அனுப்ப உயர் நீதிமன்ற தலைமை பதிவாளருக்கு அறிவுறுத்தப்படுகிறது. உச்சநீதிமன்ற, உயர் நீதிமன்ற உத்தரவுகளை அமல்படுத்துமாறு அனைத்து துறை செயலாளர்களுக்கும், துறைத் தலைவர்களுக்கும், தமிழக தலைமைச் செயலாளர் அறிவுறுத்தி இந்த உத்தரவு நகர்களை அனுப்பி வைக்கும்படியும் உத்தரவிடப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டது.