தாயுமானவன் திட்டத்தின் ஒரு அங்கமாக பெற்றோர்களை இழந்த குழந்தைகளின் நலனுக்காக 'அன்புக்கரங்கள்' திட்டத்தை தமிழக முதல்வர் நேற்று சென்னை கலைவாணர் அரங்கில் தொடங்கி வைத்தார்.

Advertisment

இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் அன்புக்கரங்கள் திட்டத்தை அமைச்சர் ராஜகண்ணப்பன் தொடங்கி வைத்தார். மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இந்த நிகழ்ச்சியானது நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ராஜகண்ணப்பனிடம் விஜய்யின் அரசியல் வருகை குறித்தும், திமுக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என திருச்சியில் விஜய் பேசியது குறித்தும் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், ''விஜய்யை பற்றி எதற்கு. அவர் இப்பொழுதுதான் வந்திருக்காரு. பாவம் சின்ன புள்ள. அரசியலுக்கு அவர் ஒரு சின்ன பிள்ளை. ஆளும் கட்சியை  விமர்சனம் செய்யாட்டி அவருக்கு அரசியல் தெரியாதே'' என்றார்.