முதல் படம் : சித்தரிக்கப்பட்டவை
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே அமைந்துள்ள பட்டீஸ்வரம் என்ற இடத்தில் அறிஞர் அண்ணா அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இத்தகைய சூழலில் தான் இந்த பள்ளியில் 11 மற்றும் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் இடையே பள்ளியில் சம்பவம் நிகழ்ந்து வந்துள்ளது. இதில் மாணவர்கள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டு வந்துள்ளனர். அந்த வகையில் கடந்த 5ஆம் தேதி (05.12.2025) பள்ளி முடித்து மாணவர்கள் வழக்கம் போல் வீட்டிற்குப் புறப்பட்டுச் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது பட்டீஸ்வரம் தேரோடும் கீழவீதியில் இரு வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள் ஒருவருக்கு ஒருவர் சண்டையிட்டுக் கொண்டனர். அதில்12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் கலையரசனை 11ஆம் வகுப்பு படிக்கும் 15 மாணவர்கள் ஒன்று சேர்ந்து கட்டை, கல் உள்ளிட்டவற்றைக் கொண்டு கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயம் அடைந்த மாணவன் கலையரசனைச் சிகிச்சைக்காகத் தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்குத் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இருப்பினும் நேற்று (06.12.2025) மூளைச் சாவு அடைந்தார். அதன் பின்னர் மேல் சிகிச்சைக்காகத் தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி மாணவர் கலையரசன் பரிதாபமாக உயிரிழந்தார். பள்ளி மாணவர்கள் 15 பேர் தாக்கியதில் மூளைச்சாவு அடைந்த 12ஆம் வகுப்பு மாணவர் உயிரிழந்த சம்பவம் சம்பவம் சக மாணவர்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் அதிர்வலையையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
அதே சமயம் உயிரிழந்த மாணவர்கள் கவியரசனின் உறவினர்கள். இந்த தாக்குதலில் ஈடுபட்ட 15 மாணவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி காவல்துறையினருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட உறவினர்களைச் சமாதானப்படுத்திய போலீசார் தொடர்புடைய மாணவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இந்த தாக்குதலில் ஈடுபட்ட 15 மாணவர்களும் கைது செய்யப்பட்டு தஞசாவூரில் உள்ள சீர்திருத்தப்பள்ளியில் அடைக்கப்பட்டுள்ளனர்.
Follow Us