திருவண்ணாமலை மாவட்டம் போளூர் பகுதியைச் சேர்ந்த மணி என்பவரின் மகன் ஆறுமுகம் (32). இவரும், இவரது நண்பருமான அதே பகுதியைச் சேர்ந்த மணிவண்ணனும் திருச்செந்தூர் அதிபிரவு ரயிலில் விழுப்புரத்தில் இருந்து திருச்செந்தூருக்கு இன்று இரவு சென்றுள்ளனர்.
ரயில் சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டை ரயில் நிலையம் வரும்போது, ஆறுமுகம் ரயிலில் படிக்கட்டில் அமர்ந்து செல்போனை பார்த்தவாறு வந்துள்ளார். அப்போது ரயிலில் இருந்த சக பயணிகள் இவரை உள்ளே வாருங்கள் எனக் கூறியுள்ளனர். அதனை பொருட்படுத்தாமல் இவர் தொடர்ந்து படியிலே அமர்ந்து செல்போனை பார்த்து வந்துள்ளார். அப்போது இவரது இடது கால் பரங்கிப்பேட்டை ரயில் நிலைய நடைமேடையில் மோதி பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
அங்கிருந்து சிதம்பரம் ரயில் நிலையம் வரை வலியால் துடிதுடித்து வந்தவரை உடனடியாக சிதம்பரம் ரயில் நிலையத்தில் இறக்கி ரயில்வே காவல்துறை மற்றும் ரயில் நிலையத்தில் இருந்தவர்களின் உதவியுடன் சிதம்பரத்தில் உள்ள கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்து சிதம்பரம் ரயில்வே காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ரயில்வே காவல்துறையினர் பயணிகள் ரயிலில் பயணிக்கும் போது படியில் அமரக்கூடாது என பல்வேறு விழிப்புணர்வுகளை ஒலிபெருக்கி மூலமாகவும் நேரடியாகவும் ஏற்படுத்தி வருகிறார்கள். அதனை கருத்தில் கொள்ளாமல் சில பயணிகள், இது போல் நடந்து கொள்வதால் பெரும் விபத்துக்கள் நடைபெறுகிறது. இனிமேலாவது பயணிகள் பாதுகாப்பாக செல்லும் வகையில் படியில் அமர்ந்து பயணிக்க வேண்டாம் என ரயில்வே காவல்துறையினர் பொதுமக்களுக்கு வலியுறுத்தியுள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/11/07/tr-2025-11-07-22-47-17.jpg)