Advertisment

கட்சியின் 3ஆம் ஆண்டு தொடக்க விழா: பாடகருடன் இணைந்து நடனமாடிய த.வெ.க. தலைவர் விஜய்!

tvk-vijay--dance

தமிழக வெற்றிக் கழகத்தின் 3ஆம் ஆண்டு தொடக்க விழா அக்கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் இன்று (02.02.2026) காலை முதல் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் தமிழக வெற்றிக் கழக மூன்றாம் ஆண்டு தொடக்க விழா அக்கட்சியின் தலைமை அலுவலகமான பனையூரில் நடைபெற்று வருகிறது. 

Advertisment

இந்நிலையில் கட்சித் தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்த விஜய் அங்கு  வைக்கப்பட்டிருந்த பெரியார், அம்பேத்கர், காமராஜர், கல்வி, வேலு நாச்சியார், அஞ்சலை அம்மாள் உள்ளிட்ட கொள்கை தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்தும்,  மலர் தூவியும் மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து கட்சியின் கொடியை ஏற்றிவைத்து விழாவைத் தொடங்கி வைத்தார். அதன் பின்னர் உள் அரங்கில் தமிழக வெற்றிக் கழகத்தின் மூன்றாம் ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாகப் பாடகர் வேல்முருகன், “தளபதி வாழ்க தளபதி வாழ்க...” என்ற பாடலை பாடி முடித்தார். . 

Advertisment

அதன் பின்னர் பாடகர் வேல்முருகனுக்கு, விஜய் பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து வேல்முருகன் விஜய்க்குக் கடவுள் அறுபடை முருகன் படத்தை வழங்கினார். அதனைத் தொடர்ந்து விஜய் உங்கள் பாடலுக்கு நான் டான்ஸ் ஆடலாமா எனக் கேட்டுள்ளார். இதனையடுத்து பாடகர் வேல்முருகன், அவரது மகளுடன் சேர்ந்து  விஜய் சிறிது நேரம் நடனம் ஆடினார். அதன் பின்னர் கலைக் குழுவினர் உடன் கைக் குலுக்கி குழுப் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.  

tvk-vijay-dance

முன்னதாக இந்த விழா தொடர்பாக  த.வெ.க. தலைவர் விஜய் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருந்த பதிவில், “என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களுக்கு, வணக்கம். நம் உயிரனைய இயக்கமான தமிழக வெற்றிக் கழகத்தின் மகிழ்ச்சிகரமான மூன்றாம் ஆண்டு, இன்று தொடங்குகிறது. இரண்டு ஆண்டுகளை இயல்பாகவும், இயல்பு தாண்டியும் நிறைவு செய்து, நீள்கிறது நம் அரசியல் பெரும் பயணம். முதன்மை அரசியல் சக்தியாகப் பரிணமிக்கும் முன்பே மக்கள் இயக்கமாக, மக்களோடு மக்களாகக் கலந்து நின்றவர்கள் நாம். இதை நாடறியும். நல்லவர்கள் அறிவார்கள். ஒன்றை மட்டும் உறுதியாகச் சொல்லலாம். சலனங்களைப் புறந்தள்ளி, சமநிலை தவறாத, அளக்கவியலாத ஆழ்கடல் த.வெ.க.; எவராலும் விலக்க இயலாத விரிவானம் த.வெ.க.; அத்தனை இலக்குகளையும் அர்ப்பணிப்புடன் வெல்லும்.

சாமானிய மக்களுக்கான அதிகார அரசியலின் வெற்றிப் போர்முரசம் த.வெ.க. 2026 சட்டமன்றத் தேர்தல் களம், இதுவரை இல்லாத புதிய சூழலைச் சுமந்து நிற்கிறது. இதற்கு ஒரே காரணம் நமது அரசியல் வருகை மட்டுமே என எல்லோரும் சொல்கின்றனர். எனவே இச்சூழலில், களத்தை நமதாக்கி, தேர்ந்த தெளிவுடனும் திறன்மிக்க நுட்பத்துடனும் தேர்தல் அரசியல் வெற்றியின் வாயிலாக, அதிகார அரசியல் அங்கீகாரம் நோக்கிச் செல்வோம். அனைத்து மக்களின் அமோக ஆதரவுடன், தீர்க்கமுடன் ஒற்றுமையாகக் களமாடி, ஆட்சி பீடத்தைக் கைக்கொள்ளும் ஜனநாயக இலக்கை உறுதியாக வெல்வோம். நல்லதே நடக்கும். வெற்றி நிச்சயம்” எனக் குறிப்பிட்டிருந்தார். 

Dance tvk Tamilaga Vettri Kazhagam tvk vijay
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe