Advertisment

தமிழ்நாட்டிற்குள் துணை ராணுவம்; தீவிர பணியில் ஈடுபடும் தேர்தல் ஆணையம்!

army

தமிழ்நாட்டில் விரைவில் சட்டமன்ற தேர்தல் வரவுள்ளதால் அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளில் மும்மரமாக ஈடுபட்டு வருகின்றன. அதே நேரத்தில், தேர்தல் ஆணையமும் எஸ்ஐஆர் உள்ளிட்ட பல்வேறு பணிகளை நடத்தி முடித்துள்ளன. தற்போது, தேர்தலை நடத்துதல் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட பணிகளில் தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. நடக்கவுள்ள சட்டமன்ற தேர்தல், எந்த வித இடையூறும் அல்லது சிக்கலும் இல்லாமல் முறையாக நடைபெறுவதை உறுதி செய்யத் தேர்தல் ஆணையம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

Advertisment

இதன் ஒரு பகுதியாக, சில தினங்களுக்கு முன்பாக தலைமைத் தேர்தல் ஆணையர் தமிழ்நாட்டிற்கு வருகை தந்தார். அப்போது, தமிழ்நாட்டில் உள்ள தேர்தல் ஆணைய அதிகாரிகளிடம் தேர்தல் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் ஈடுபட்டார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில், தேர்தல் பணிகள் குறித்து பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனிடையே, சமீபத்தில் தேர்தல் நடைபெறும் தேதிகள் இன்னும் சில தினங்களில் அறிவிக்கப்படும் என்று தலைமைத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Advertisment

இதனையொட்டி, தேர்தல் பாதுகாப்புப் பணிகளுக்காக விசாகப்பட்டினத்திலிருந்து துணை ராணுவப் படை தமிழ்நாட்டிற்கு வருகை தந்துள்ளது. சென்னையில் உள்ள வண்ணாரப்பேட்டை மற்றும் கிண்டியில் துணை ராணுவத்தினர் 131 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும், 70 பேர் கொண்ட சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் சென்னை கே.கே.நகரில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Assembly election election commission
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe