சென்னை கோயம்பேடு அடுத்து நெற்குன்றத்தைச் சேர்ந்த வரலட்சுமி என்ற பெண் சில நாட்களுக்கு முன்னர் காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சிக்கு ஒன்றுக்கு சென்றுள்ளார். நிகழ்ச்சி முடிந்து பேருந்து மூலம் சென்னை வந்த அவர் வீட்டில் வந்து நான்கு சவர நகையை காணவில்லை என அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இது தொடர்பாக கோயம்பேடு கே10 காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் வரட்சுமியின் அருகே பேருந்தில் அமர்ந்திருந்த பெண் ஒருவர் நகையை திருடியது கண்டுபிடிக்கப்பட்டது.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/09/06/b-2025-09-06-18-22-35.jpg)
அவரை கைது செய்து கோயம்பேடு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் நகை எடுத்ததைஒப்புக்கொண்டார். அவர் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திசிறையில் அடைத்தனர். முன்னதாக பாரதியின் மேல் பத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளனது குறிப்பிடத்தக்கது.