Advertisment

'எதையாவது படித்தால் தானே பழனிசாமிக்கு இது புரியும்'-மு.க.ஸ்டாலின் விமர்சனம்

5922

'Palaniswamy will understand this if he reads something' - MK Stalin's criticism Photograph: (dmk)

திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் இன்று திமுக நடத்தும் 'வெல்லும் தமிழ்ப்பெண்கள்' எனும் தலைப்பில் திமுக மகளிர் மேற்கு மண்டல மாநாடு நடைபெற்று வருகிறது.

Advertisment

இதில் கலந்துகொண்ட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், ''கருப்பு சிவப்பு கடல் போல ஒரு இடத்தில் கூடியிருப்பதாக வரலாறு இருக்காது. இப்படி உங்களை பார்க்கவே பவர்ஃபுல்லாக இருக்கிறது. உமென் பவரில் திமுக மீண்டும் பவருக்கு வரப் போகிறது என்பது உறுதியாகி இருக்கிறது. இப்படி ஒரு பவர்ஃபுல் மாநாட்டை மிகச் சிறப்பாக இந்த மாநாட்டுப் பணிகள் எல்லாம் முழுமையாக தன்னுடைய தோளில் சுமந்து வெற்றி வெற்றிகரமாக நிறைவேற்றிக் காட்டி இருக்கக்கூடிய ஆற்றல் மிக்க செயல் வீரர் செந்தில் பாலாஜிக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்கள்.

Advertisment

கடந்த நான்கு ஆண்டுகளில் 100 நாள் வேலை திட்டத்தில் பயனடைந்தவர்களின் எத்தனை விழுக்காடு பெண்கள் தெரியுமா? சொன்னால் ஷாக் ஆகிவிடுவீர்கள். 88 விழுக்காடு பெண்கள். பெண்களுக்கு வாழ்வளித்த இப்படிப்பட்ட திட்டத்தை நிறுத்தி இருக்கிறார்கள். இதனால் கிராமப் பொருளாதாரமும் பணப்புழக்கமும் அடி வாங்கப் போகிறது. பாஜகவின் இந்த நடவடிக்கை பெண்களுக்கு முற்றிலும் விரோதமானது. அதற்கு ஒத்து ஊதுவது யார்? எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி.  அவர் சொல்லுகிறார் நூறு நாள் வேலைத்திட்டத்தை நிறுத்தவில்லை 125 நாளாக உயர்த்திருக்கிறார்கள் என்று பச்சைப் பொய்யை பிரச்சாரமாக செய்து கொண்டிருக்கிறார்  எடுபிடி பழனிசாமி.

ஏற்கனவே ஆண்டுக்கு சராசரியாக 47 நாள்தான் வேலை கொடுத்திருக்கிறார்கள். இனி அதையும் கொடுக்கப் போவதில்லை. இதுபோதாது என்று புதுத்திட்டத்தில் நிதிச் சுமையை மாநிலங்களுடைய தலையில் கட்டி விட்டார்கள். இன்னும் எக்கச்சக்க கண்டிஷன் எல்லாம் போட்டு இருக்கிறார்கள். அதையெல்லாம் வைத்துப் பார்த்தல் இதுவரை கிடைத்த பணி இனி பெண்களுக்கு பெண்கள் கிடைக்குமா என தெரியாத நிலையில் நாம் இருக்கிறோம். எதையாவது படித்தால் தானே பழனிசாமிக்கு இது புரியும். கமலாலயத்தில் எழுதிக் கொடுப்பதை அதிமுக லெட்டர் பேடில் வெளியிட்டு அத்துடன் கதை முடிந்தது என போய்விடுகிறார். ஒரு படி மேலே போய் பாஜக சங்கிகளே கூச்சப்படும் நிலைமைக்கு 100 நாள் திட்டம் ரத்துக்கு முட்டுக்கொடுத்து சுற்றுகிறார். இப்படிப்பட்ட துரோகங்களையும் தடைகளையும் தாண்டி தான் திமுக ஆட்சியில் நடைபெற்ற சாதனைகளை நாம் செய்து கொண்டு வருகிறோம்'' என்றார்.  

dmk 100 days workers admk edappaadi palanisamy m.k.stalin Women
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe