உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்களால் நேற்று (15-01-26) பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது. இந்த பண்டிகையையொட்டி, உலகப் புகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டியை அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார்.
1,000 காளைகள், 550 காளையர்கள் பங்கேற்ற இந்த போட்டி, காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6:30 மணி வரை நடைபெற்றது. இதில், 60 பேர் காயமடைந்தனர். இப்போட்டியில், 22 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்த வலையங்குளம் பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் என்ற மாடுபிடி வீரருக்கு ரூ.8 லட்சம் மதிப்புள்ள கார் பரிசு வழங்கப்பட்டது. அதேபோல் 17 காளைகளை அடக்கிய அவனியாபுரம் கார்த்திக் இரண்டாவது பரிசாக இருசக்கர வாகன வழங்கப்பட்டது.
இந்த நிலையில், மாட்டுப் பொங்கல் தினமான இன்று (16-01-26) காலை மதுரை பாலமேடு பகுதியில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. இப்போட்டியில் பங்கேற்க காளைகளும், காளையர்களும் நேற்று இரவே அங்கு வந்து பயிற்சி எடுத்தனர். அதனை தொடர்ந்து இன்று அதிகாலை, காளைகள் மாடுபிடி வீரர்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது. இப்போட்டியை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த போட்டியில் 1,000 காளைகளும் 6,00 மாடுபிடி வீரர்களும் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.
Follow Us