ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தை முன்னிட்டு நாட்டின் உயரிய விருதுகளான பத்மஸ்ரீ, பத்ம பூஷன், பத்ம விபூஷன் ஆகிய பத்ம விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இந்தாண்டு (2026) 5 பேருக்கு பத்ம விபூஷன் விருதுகளும், 13 பேருக்கு பத்ம பூஷன் விருதுகளும், 113 பேருக்கு பத்மஸ்ரீ என மொத்தம் 131 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் தமிழகத்தைச் சேர்ந்த 13 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
எழுத்தாளர் சிவகங்கரி, சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி, முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி விஜயகுமார், புதுச்சேரி சிலம்ப கலைஞர் பழனிவேலு, திருவாரூரை சேர்ந்த மிருதங்க கலைஞர் பக்தவச்சலம், நீலகிரியை சேர்ந்த குரும்பா ஓவியர் ஆர். கிருஷ்ணா, கால்நடை மருத்துவர் புண்ணிய மூர்த்தி, திருத்தணியைச் சேர்ந்த ஓதுவார் சுவாமிநாதன், நடிகர் மாதவன், இந்திய கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மா, இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர், முன்னாள் அமைச்சர் ஹெச்.வி. ஹண்டே, சென்னையைச் சேர்ந்த வயலின் கலைஞர் என். ராஜம், கலைத்துறையில் காயத்ரி பாலசுப்பிரமணியன், ரஞ்சனி பாலசுப்பிரமணியம் உள்ளிட்டோருக்கு பத்ம ஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/01/25/central-vista-1-2026-01-25-19-45-05.jpg)
மேலும், கேரள நடிகர் மம்மூட்டி, மறைந்த ஹிந்தி சூப்பர் ஸ்டார் தர்மேந்திரா உள்ளிட்டோருக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு கேரளாவின் மறைந்த முன்னாள் முதலமைச்சர் அச்சுதானந்தன் உள்ளிட்ட கேரளாவைச் சேர்ந்த 3 பேருக்கு பத்ம விபூஷன் அறிவிக்கப்பட்டுள்ளது.
Follow Us