Advertisment

பாரிவேந்தரை தடுத்து நிறுத்திய போலீஸ்; பிரதமர் கூட்டத்தில் பங்கேற்காமலேயே திரும்பியதால் பரபரப்பு!

pariven

Paarivendhar returned without attending the Prime Minister's meeting for Police stopped him

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பரப்புரை கூட்டம் நேற்று (23.01.2026) நடைபெற்றது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சியின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

Advertisment

அதன்படி, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், பா.ம.க தலைவர் அன்புமணி, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் தலைவர் ஜான் பாண்டியன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர். இந்த விழாவில், பிரதமர் மோடி, எடப்பாடி பழனிசாமி, நயினார் நாகேந்திரன், அன்புமணி ஆகியோர் திமுக அரசை கடுமையாக விமர்சித்து பேசியிருந்தனர்.

Advertisment

இந்த நிலையில், அதிமுக - பா.ஜ.க உள்ளடக்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்திய ஜனநாயகக் கட்சியின் நிறுவனர் பாரிவேந்தர், பிரதமர் மோடி பங்கேற்ற நிகழ்ச்சியில் பங்கேற்காமல் திரும்பியுள்ளார். மதுராந்தகத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசிய பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொள்ள இந்திய ஜனநாயகக் கட்சியின் நிறுவனர் பாரிவேந்தரும், கட்சித் தலைவர் ரவி பச்சமுத்து காரில் வந்தனர்.

பிரதமர் மோடி வருகை தந்த நேரத்திலேயே அவர்கள் இருவரும் வந்ததால், பொதுக்கூட்டம் நடைபெறும் 800 மீட்டருக்கு முன்பாக அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியுள்ளனர். மேலும் அந்த நேரத்தில் பொதுக்கூட்டம் நடந்த இடத்துக்குள் அனுமதிக்க போலீசார் மறுப்பு தெரிவித்துள்ளனர். இதனால், இருவரும் காரிலேயே உட்கார்ந்து காத்திருந்த அவர்கள், கூட்டத்தில் பங்கேற்காமலேயே சிறுது நேரம் கழித்து அங்கிருந்து சென்றுவிட்டனர்.

nda alliance paarivendhar
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe