மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் கடந்த 2005ஆம் ஆண்டு முதல், நாட்டில் நடைமுறையில் இருந்து வருகிறது. இந்த திட்டத்தின் மூலம், ஒரு நபர் ஆண்டுக்கு குறைந்தபட்சம் 100 நாள் வேலை செய்யும் நடைமுறை உள்ளது. இந்த திட்டத்தின் கீழ், நாட்டில் கோடிக்கணக்கான மக்கள் தொழிலாளர்களாக உள்ளனர். இந்த சூழ்நிலையில், மகாத்மா காந்தி பெயரில் உள்ள இந்த திட்டத்தை மாற்றம் செய்து ‘விக்ஸித் பாரத் - ரோஜ்கர் மற்றும் அஜீவிகா மிஷன் (கிராமின்) (VB - G RAM G) மசோதா - 2025 ’ என்ற பெயரில் புதிய திட்டத்தை பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசு கொண்டு வர திட்டமிட்டது. 

Advertisment

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில், 90% நிதியை மத்திய அரசு வழங்கி வந்த நிலையில் இனி 60% மட்டுமே வழங்கும் எனவும் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டது. அதோடு மீதம் உள்ள 40% நிதியை மாநிலங்கள் ஏற்க வேண்டும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டது. மேலும், இந்த புதிய திட்டத்தில் 125 நாட்கள் வேலைவாய்ப்பை உறுதி செய்யப்படவுள்ளது. இத்தகைய சூழலில் தான் எதிர்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு இடையே நாடாளுமன்றத்தின் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் இந்த மசோதா கொண்டுவரப்பட்டது. இதனையடுத்து இரு அவைகளிலும் இந்த மசோதா நிறைவேறியது. 

Advertisment

அதன் தொடர்ச்சியாக குடியரசுத் தலைவர் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு விக்ஸித் பாரத் ரோஜ்கர் மற்றும் அஜீவிகா மிஷன் (கிராமின்) மசோதா, 2025க்கு ஒப்புதல் அளித்திருந்தார். இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப.சிதம்பரம் எம்,பி. செய்தியாளர்களை சந்தித்துப் பேசுகையில், “காந்தியை மீண்டும் ஒருமுறை பாஜக அரசு படுகொலை செய்துள்ளது. இது காங்கிரஸ் அறிமுகப்படுத்திய திட்டம் அல்ல. காங்கிரஸ் கட்சி கொண்டுவந்த திட்டத்தில் வேலையில்லாதோர் யார் வேண்டுமானாலும் வேலைக் கேட்டால் வேலைக்  கொடுக்கப்பட வேண்டும். ஆனால் தற்போதைய திட்டத்தில் வேலை இருந்தால் தான், வேலை கேட்க முடியும். வேலை இல்லாத பட்சத்தில் வேலையில்லாதவர்கள் வேலை கேட்கக் கூட வாய்ப்பில்லை.

central-vista-1

காங்கிரஸ் கட்சி திட்டத்தைக் கொண்டு வரும்போது நாடு முழுவதும் வேலை நடைபெற்றது. ஆனால் தற்போது ஒன்றிய அரசு ஒவ்வொரு மாநிலத்திலும் குறிப்பிட்ட பகுதிகளை அறிவிக்கும் அந்த பகுதிகளில் மட்டுமே வேலை நடக்கும். நாங்கள் அறிவித்த திட்டத்தில் முழு சம்பளத்திற்கு ஒன்றிய அரசே பொறுப்பு. ஆனால் தற்போதைய திருத்தத்தின் படி 60% மட்டுமே ஒன்றிய அரசு பொறுப்பேற்கும். மீதமுள்ள 40% மாநில அரசுக்குச் சுமையாக மாறியுள்ளது. மாநில அரசுகள் ஏற்கனவே நிதி தட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. இந்த திட்டத்தில் கொண்டு வந்துள்ள மாற்றங்களால் பாஜக அரசு காங்கிரஸ் கொண்டுவந்த திட்டத்தைச் சிதைத்துப் புதைத்து விட்டது” என்று கூறினார். 

Advertisment