Advertisment

“மகிழ்ச்சியளிக்கிறது” - ப. சிதம்பரம் எம்.பி. நெகிழ்ச்சி!

p-chidamram-mic

தமிழக சட்டமன்றத் தேர்தலையொட்டி, திமுக பொருளாளர் டி.ஆர். பாலு எம்.பி., தலைமையிலான 7 பேர் கொண்ட குழு கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு தொடர்பாக தீவிர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், திமுக - காங்கிரஸ் இடையே கடந்த 1 வாரமாக தொகுதி பங்கீடு குறித்தான பேச்சுவார்த்தையில் கடும் இழுபறி நீடித்து வந்தது. அதாவது, காங்கிரஸ் திமுகவிடம் 40க்கு மேற்பட்ட இடங்களும், 2 ராஜ்யசபா சீட்டும் கேட்டதாகவும் கூறப்பட்டது. 

Advertisment

அதற்கு, தே.மு.தி.க., மக்கள் நீதி மய்யம் போன்ற புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் கடந்த சட்டமன்றத் தேர்தலில் ஒதுக்கியது போலவே காங்கிரஸ் கட்சிக்கு 25 சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் 1 மாநிலங்களவை சீட்டு மட்டுமே கொடுக்க முடியும் என திமுக கறார் காட்டியது. அதற்கு இசைவு காட்டாத காங்கிரஸ், குறைந்தபட்சம் 35 முதல் 40 இடங்களாவது வேண்டும் என திமுகவிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. இந்த பரபரப்பான சூழ்நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும்,  தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுக - காங்கிரஸ் இடையேயான தொகுதி பங்கீட்டு ஒப்பந்தம் நேற்று (04.03.2026) இரவு கையெழுத்தானது. 

Advertisment

அதன்படி, திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு 28 தொகுதிகளும், மாநிலங்களவையில் ஒரு இடமும் ஒதுக்கப்பட்டது. இந்நிலையில் இது குறித்து மத்திய நிதி அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப. சிதம்பரம் எம்.பி., எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தி.மு.க. - காங்கிரஸ் இடையே பேச்சுவார்த்தை முடிந்து தேர்தல் உடன்பாடு ஏற்பட்டது மகிழ்ச்சியளிக்கிறது. இரு கட்சிகளின் தலைவர்களுக்கு என் பாராட்டுக்கள்” எனத் தெரிவித்துள்ளார். முன்னதாக தி.மு.க. - காங்கிரஸ் இடையே நிலவி வந்த தொகுதிப் பங்கீடு குறித்த சிக்கல்களைத் தீர்ப்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலினை, ப. சிதம்பரம் நேற்று முன்தினம் (03.03.2026) நேரில் சந்தித்துப் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

Alliance Assembly Election 2026 dmk congress P chidambaram
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe