Advertisment

“விஜய்க்கு வாழ்த்துகள்; அவரது முயற்சி வெல்லாது” - ப. சிதம்பரம் எம்.பி. பரபரப்பு பேட்டி!

p-chidamparam-karthik-chidamparam-pm

முன்னாள் மத்திய நிதி அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப. சிதம்பரம் எம்.பி., தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில், காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு குறித்து   செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.  அப்போது அவர். “சட்டமன்ற தேர்தல் வரும் மார்ச் மாதத்தின் இரண்டாம் பகுதியில் அல்லது ஏப்ரல் மாதம் முதல் பகுதியில் வரும் என்பது எனக்குக் கிடைத்த செய்தி. தேர்தல் அறிவிப்பு பிப்ரவரி மாதமே வந்து விடும் என்று தகவல் கிடைத்ததுள்ளது. 

Advertisment

எனவே தான் சிவகங்கை மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியை தேர்தல் ஆயத்த நிலைக்கு கொண்டுவருவதற்காக சில மாதங்களாக முயற்சி செய்து வருகிறோம். அந்த முயற்சி தற்போது மேலும் விரைவுபடுத்தப்பட்டுள்ளது. தற்போது நாங்கள் (காங்கிரஸ்) இந்தியா கூட்டணியில் இருக்கிறோம். காங்கிரஸ் இந்தியா கூட்டணியில் தான் இருக்கிறது. கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவதற்காக 5 பேர் கொண்ட குழுவை காங்கிரஸ் தலைமை நியமித்திருக்கிறது. அந்த குழு முதலமைச்சர் மு.க. ஸ்டாடலின் மற்றும் திமுகவில் முக்கிய தலைவர்கள் சிலரை ஒரு முறை சந்தித்து பேசியிருக்கிறது. நானும் ஒரு குழுவை நியமிக்கிறேன் அதன் பிறகு கூட்டணி பற்றிய பேச்சு வார்த்தை வைத்துக்கொள்ளலாம் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியதாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை என்னிடம் கூறினார். 

Advertisment

மேலும் இந்த கூட்டணி வலிமை பெறும். வேறு எந்தவித முடிவும் எடுக்க வாய்ப்பில்லை. இந்தியா கூட்டணி ஒற்றுமையாக வலிமையாக தேர்தலை சந்திக்கும். நிச்சயம் தேர்தலிலே வெல்லும் என்பது என்னுடைய முழு நம்பிக்கை. விஜய்க்கு வாழ்த்துக்கள். இருப்பினும் அவரது முயற்சி வெல்லாது. இந்தியா கூட்டணி தான் வெல்லும். அதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்தியா கூட்டணி வலிமையான கூட்டணி. பல தேர்தல்களை சந்தித்த கூட்டணி. தேர்தலை எப்படி நடத்துவது, தேர்தலிலே எப்படி பிரச்சாரம் செய்வது என்பதையெல்லாம் பழகிய கூட்டணி. யாருக்கு யார் போட்டி என்பது தொகுதியை பொறுத்து தான் அமையும், இருந்தாலும் இறுதியில் இந்தியா கூட்டணி தான் வெல்லும் என்பது எனது நம்பிக்கை. காங்கிரஸ் கட்சிக்கு எத்தனை தொகுதிகள் என்பதை பேச்சுவார்த்தை மூலமாக தலைவர்கள் உறுதி செய்வார்கள். 

congress--3m-team

கடைசியில் எத்தனை இடங்கள் என்பதை திமுக தலைவரும் காங்கிரஸ் தலைவரும் முடிவு செய்வார்கள். மற்றவர்கள் கருத்து தான் சொல்லமுடியும். ஆனால் அந்த இரு தலைவர்கள் தான் முடிவு செய்வார்கள். இந்திய மாநிலங்களிலேயே தமிழ்நாடு தான் கடந்த ஆண்டு அதிகமான வளர்ச்சி பெற்று முதலிடத்தில் உள்ளது என்று ஒன்றிய அரசின் நிதி ஆயோக் அறிக்கை வெளியிட்டுள்ளது. எனவே தமிழ்நாட்டை உத்திர பிரதேசத்தோடு ஒப்பிடுவதில் எனக்கு உடன்பாடு கிடையாது. அதற்கு பல காரணங்கள் இருக்கிறது. அந்த காரணங்களை தற்போது இங்கு சொல்ல வேண்டிய அவசியமில்லை” எனத் தெரிவித்தார். என்று பேசியுள்ளார்.

dmk Alliance Assembly Election 2026 congress mk stalin P chidambaram Tamilaga Vettri Kazhagam tvk vijay
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe