பட்டாசு வெடி விபத்து; ஆலையின் உரிமத்தை ரத்து!

102

 

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே கீழதாயில்பட்டியில் தனியாருக்கு சொந்தமான ஒரு பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பல தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.

இந்த நிலையில், இன்று திடீரென பட்டாசு ஆலையில் பயங்கர சத்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. மேலும், அடுத்தடுத்து நான்கு முறை பயங்கர வெடி சத்தம் கேட்டுள்ளது. இந்த வெடி விபத்தால் சுமார் ஒரு மணி நேரம் பட்டாசுகள் வெடித்துச் சிதறியுள்ளன. பட்டாசு ஆலையில் சுமார் 50 அறைகள் உள்ள நிலையில், இதுவரை 15 அறைகள் சேதமடைந்துள்ளன.

தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு தீயணைப்புத் துறை வீரர்கள் விரைந்து வந்து தீயைக் கட்டுக்குள் கொண்டுவரும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்தப் பட்டாசு வெடி விபத்தில் ஒரு தொழிலாளர் உயிரிழந்துள்ளதாகவும், 4 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால், பெரும்பாலான தொழிலாளர்கள் பட்டாசு ஆலைக்கு வரவில்லை. இதனால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், விபத்து ஏற்பட்ட பட்டாசு ஆலையின் உரிமைத்தை தற்காலிகமாக மாவட்ட வருவாய் அலுவலர் ரத்து நடவடிக்கை எடுத்துள்ளார். 

fire crackers Virudhunagar
இதையும் படியுங்கள்
Subscribe