வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அடுத்த கந்தனேரி பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன் என்பவரின் மகன் சக்திவேல் (25). இவர் பைக் சாகசத்தில் ஈடுபட்டு அதை தனது சமூக வலைதள பக்கங்களில் பதிவேற்றம் செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் சென்னை - பெங்களூர் அதிவிரைவு சாலையில் தலையில் தவெக துண்டு மற்றும் கையில் தவெக கொடியுடன் சாலையில் பெட்ரோலை ஊற்றி தீ பற்ற வைத்தும், வாயில் இருந்து ஊதி நெருப்பு பற்ற வைத்தும், தவெக கொடியை ஏந்தியவாறு அதிவேக பைக் சாகசத்தில் ஈடுபட்டு அதை வீடியோ ரீல்ஸ்சாக பதிவேற்றம் செய்துள்ளார்.
மேலும் பள்ளிகொண்டா சுங்கச்சாவடி அருகே பொது மக்களை அச்சுறுத்தும் வகையிலும், ஆபத்தான முறையிலும் பைக்கை ஓட்டியுள்ளார். இதனை அடுத்து சக்திவேல் என்ற இளைஞர் மீது பொது சொத்து சேதம், போக்குவரத்து விதி மீறல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் பள்ளிகொண்டா காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Follow Us