திருத்தணி அருகே பொதட்டூர்பேட்டை காவல் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்து வந்தவர்களை கைது செய்யக்கூடாது, நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று இரண்டு கிராம மக்கள் காவல் நிலைய வாகனத்தை முற்றுகையிட்டு  முன்பு தரையில் படுத்துக் கொண்டு போலீஸுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisment

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தொகுதி பள்ளிப்பட்டு வட்டம் மேல் நெடுங்கல் காலனி பகுதியைச் சார்ந்த ஹரிதாஸ் என்பவர் தனது மோட்டார் சைக்கிளில் கீழ் நெடுங்கல் காலனி பகுதி வழியாக வந்துள்ளார். அதிவேகமாக வந்ததாக கூறி  அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் ஐந்துக்கும் மேற்பட்டோர் தன்னை தாக்கியதாக ஹரிதாஸ் தந்தை நாகமணி இடம் தெரிவித்துள்ளார் நாகமணி.

Advertisment

இதுகுறித்து பொதட்டூர்பேட்டை காவல் நிலையத்தில் தனது மகனை தாக்கிய கீழ் நெடுங்கல் காலனி பகுதியைச் சேர்ந்த பத்துக்கு மேற்பட்டோர் மீது புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் ஐந்து பேரை போலீசார் விசாரணைக்கு கைது செய்து அழைத்து வந்துள்ளனர்.

அப்போது பொதட்டூர்பேட்டை காவல் நிலையத்திற்கு போலீசார் வாகனத்தில் வந்த கீழ்நெடுங்கள் காலடியை சேர்ந்தவர்களை கைது செய்யக்கூடாது, நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று புகார் கொடுத்த நாகமணி மற்றும் கீழ் நெடுங்கல் காலனி மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து கொண்டு போலீஸ் வாகனத்தை மறித்து போலீஸ் வாகனம் முன்பு தரையில் படுத்துக்கொண்டு எதிர்ப்பு தெரிவித்தனர்.

Advertisment

புகார் தெரிவித்த நாகமணி புகாரை நான் திரும்பப் பெற்றுக் கொள்வதாக நாங்கள் ஒரே கிராமத்தைச் சேர்ந்தவர்கள் புகார் வேண்டாம் என்று தெரிவித்ததால் போலீசார் சமாதானமாக செல்வதற்கு இரு தரப்பையும் அழைத்துக் கொண்டு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.