தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் கடன் வாங்க சிபில் ஸ்கோர் கேட்கப்படுவது. இது விவசாயிகளுக்கு மிகப்பெரிய பிரச்சினையாக இருக்கிறது. டெல்டா மாவட்டங்களுக்கு இப்போது விவசாயத்துக்கு காவிரி நீரை திறந்து விட்டிருக்கிறார்கள். இதையொட்டி, நடவு செய்யவதற்காக தொடக்க வேளண்மை வங்கிகளில் விவசாயிகள் கடன் வாங்குவதில் பெரிய சிக்கல் நீடித்து வருகிறது.
கடன் பெற பல சான்றிதழ்களை வாங்க வேண்டியிருப்பதாகவும், அதனால் கடன் பெற முடிவதில்லை என்றும் விவசாயிகள் என்னிடம் ஏற்கனவே கூறியிருந்தனர்.
தமிழகத்திற்கு பிரதமர் வந்திருந்த போது, விவசாயிகள் வைத்த கோரிக்கை மனுவை நேரில் கொடுத்தேன். அதனை பரிசீலிப்பதாக பிரதமர் கூறினார். இது குறித்து நடவடிக்கையும் எடுத்துள்ளார்.
கடந்த 17-07-2025 அன்று விவசாயிகளிடம் சிபில் ஸ்கோர் பெறுவது தொடர்பாக தமிழக அரசு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. ஆனால், நான் பிரதமரை சந்தித்து மனு அளித்த பிறகு, அதாவது 28-07-25 அன்று , பழைய முறைப்படி கடன் வழங்க எல்லா தொடக்க வேளாண்மை சங்கத்துக்கும் தமிழக அரசு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. அதிமுக என்றென்றும் விவசாயிகள் பக்கம் இருக்கும்’’ என்றார்
Follow Us