"மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் " இரண்டாம் கட்ட சுற்றுப் பயணத்தை  மேற்கொள்ள,  இன்று திருச்சிக்கு வந்தார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி.  திருச்சி  விமான நிலையத்தில்  பத்திரிகையாளர்களை சந்தித்தார்.அப்போது அவர், ‘’இன்று சிவகங்கை மாவட்டத்தில் என்னுடைய  பயணத்தை தொடங்கவிருக்கிறேன். இதுவரை 49 சட்டமன்றத் தொகுதிகளில் பயணம் மேற்கொண்டதில் மக்களிடையே எழுச்சியைப் பார்க்க முடிந்தது.

Advertisment

தொடக்க வேளாண்மைக்  கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் கடன் வாங்க சிபில் ஸ்கோர் கேட்கப்படுவது. இது விவசாயிகளுக்கு  மிகப்பெரிய பிரச்சினையாக இருக்கிறது.  டெல்டா மாவட்டங்களுக்கு  இப்போது விவசாயத்துக்கு காவிரி நீரை திறந்து விட்டிருக்கிறார்கள்.  இதையொட்டி, நடவு செய்யவதற்காக  தொடக்க வேளண்மை வங்கிகளில் விவசாயிகள் கடன் வாங்குவதில் பெரிய சிக்கல் நீடித்து வருகிறது.

Advertisment

கடன் பெற பல சான்றிதழ்களை வாங்க வேண்டியிருப்பதாகவும்,  அதனால் கடன் பெற முடிவதில்லை என்றும் விவசாயிகள் என்னிடம் ஏற்கனவே கூறியிருந்தனர்.

தமிழகத்திற்கு பிரதமர் வந்திருந்த போது, விவசாயிகள் வைத்த கோரிக்கை  மனுவை நேரில் கொடுத்தேன்.  அதனை  பரிசீலிப்பதாக பிரதமர்  கூறினார். இது குறித்து  நடவடிக்கையும் எடுத்துள்ளார்.

Advertisment

கடந்த 17-07-2025 அன்று விவசாயிகளிடம் சிபில் ஸ்கோர் பெறுவது தொடர்பாக தமிழக அரசு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. ஆனால்,  நான் பிரதமரை சந்தித்து மனு அளித்த பிறகு, அதாவது 28-07-25 அன்று , பழைய முறைப்படி கடன் வழங்க எல்லா தொடக்க வேளாண்மை சங்கத்துக்கும் தமிழக அரசு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.  அதிமுக என்றென்றும் விவசாயிகள் பக்கம் இருக்கும்’’ என்றார்