Advertisment

‘நம்பி வந்து ஏமாற வேண்டாம்..’ - கூமாபட்டியின் மறுப்பக்கம்!

104

“ஏங்க... எங்க ஊரைப் பாருங்க, எங்க ஊரு தண்ணியப் பாருங்க... தமிழ்நாட்டிலேயே, ஏன், உலகத்துலயே இந்த மாதிரி ஊர் இல்லைங்க. உங்களுக்கு லவ் ஃபெயிலியரா? லவ் பண்ணி டைவோர்ஸ் ஆகிட்டு கஷ்டப்படுறீங்களா? கவலைப்படாதீங்க... கூமாபட்டிக்கு வாங்க... இந்தத் தண்ணீர்ல குளிச்சுப் பாருங்க... எந்த வியாதியும் வராது. எந்தக் கஷ்டமும் வராது. எங்க ஊரு சொர்க்க பூமிங்க” என்ற ரீல்ஸ் வீடியோ திடீரென இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அதிகளவில் ட்ரெண்டாகியது.

Advertisment

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே அமைந்துள்ளது கூமாபட்டி என்கிற சிறிய கிராமம். பிளவக்கல் பெரியார் அணை மற்றும் கோயிலாறு அணையுடன் மலையடிவாரத்தில் இந்தக் கிராமம் அமைந்திருப்பதால், கண்ணுக்கு விருந்தளிக்கும் இயற்கைக் காட்சிகளைக் கொண்டுள்ளது. இதற்கிடையே, அதே ஊரைச் சேர்ந்த தங்கப்பாண்டி என்ற இளைஞர், இstru: இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மூலம் கூமாபட்டியின் அருமை பெருமைகளைத் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி, நெட்டிசன்கள் பலரும் “கூமாபட்டி எங்கே இருக்கு?” எனத் தேடத் தொடங்கினர். இதனால், இணையத் தேடுதலில் கூமாபட்டி ட்ரெண்டாகத் தொடங்கியது.

Advertisment

ஆனால், வீடியோவில் காட்டப்படுவதுபோல, தற்போது அந்தக் கிராமம் இயற்கைச் செழிப்புடன் இல்லை என்றும், ஆறுகள் வறண்டு இருப்பதாகவும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இணையத்தில் பரவும் வீடியோ பழையதாக இருக்கலாம் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர். இது ஒரு பக்கம் என்றால், மறுபக்கம், அந்த அணையில் குளிக்கவோ மீன் பிடிக்கவோ அனுமதி இல்லை. சுற்றுலாப் பயணிகள் நம்பி வந்து ஏமாற வேண்டாம் என்று பொதுப்பணித்துறை அறிவுறுத்தியுள்ளது.

viral video tngovt trending
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe