Advertisment

இருதொகுதிகளுக்கு விருப்ப வேட்புமனு; வி.எஸ்.ஞானவேலன் அதிரடி!

2

தமிழகத்தில் விரைவில் 2026 சட்டப்பேரவை தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கட்சி தலைமைகள் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி வரும் அதேவேளையில் மறுபுறம் உள்ளூர்களில் உள்ள அரசியல் நிலவரங்களும் வேகமெடுத்துள்ளது.

Advertisment

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி தாலுகா, ஆலங்காயம் மேற்கு ஒன்றியச் செயலாளர் வி.எஸ்.ஞானவேலன். திமுகவின் ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர், ஒன்றிய கழக பொறுப்பாளர்,  ஒன்றிய கழக செயலாளர் என கடந்த 26 ஆண்டுகளுக்கு மேலாக அரசியல் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். கடந்த 2015ஆம் ஆண்டு அவருடைய சிறிய கிராமத்தில் 'தளபதி அறிவாலயம்' என்ற ஒன்றை உருவாக்கி, அதனை அப்போதைய திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகனை வைத்து திறந்துள்ளார்.

Advertisment

இந்நிலையில் தற்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் 2.0 அரசு தொடர்ந்திட  சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஆலங்காயம் மேற்கு ஒன்றிய செயலாளர் வி.எஸ்.ஞானவேலன் வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் சட்டமன்றம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு விருப்ப மனு கொடுத்தார்.

Election dmk
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe