Advertisment

“திருந்தவில்லை எனில் டிசம்பர் 15ஆம் தேதி திருத்தப்படுவீர்கள்” - எச்சரிக்கை விடுத்த ஓபிஎஸ்!

o

OPS warns Edappadi Palaniswami at december 15

சென்னை வேப்பேரியில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு கூட்டம் இன்று (24-11-25) நடைபெற்றது. இந்த கூட்டத்தில், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு இன்று முதல் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு கழகமாக மாறி இருப்பதாக ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Advertisment

இந்த கூட்டத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது, “கடந்த மூன்று ஆண்டுகளாகவே தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் தந்த தியாக உணர்வு செயல்பாடுகளுக்கு எப்போதும் நான் நன்றி கடன் பெற்றிருக்கிறேன். கழகத்தினுடைய நிரந்தர பொதுச் செயலாளராக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தான் இருக்கிறார். அதை மீறி சில சர்வாதிகாரிகளால் நம்முடைய இயக்கம் கடந்த 11 தேர்தல்களில் தோல்வியை சந்தித்திருக்கிறது. தவறான நடைமுறை, தவறான பொதுக்குழு, தவறான பாதையில் சென்று தோல்வியை சந்தித்து வருகிறது. ஒட்டுமொத்த மக்களின் ஆதரவையும் நம்பிக்கையையும் அதிமுக இழந்துவிட்டது

Advertisment

இப்போது நாம் கண்ணீர் விட்டு அழுக்கூடிய நிலையில் அதிமுக இருக்கிறது. ஒட்டுமொத்த மக்களின் ஆதரவையும் நம்பிக்கையையும் அதிமுக இழந்துவிட்டது. டிசம்பர் 15ம் தேதி நடக்கும் ஆலோசனை கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும். எடுக்கும் முடிவு தொண்டர்கள் விரும்பும் முடிவாக இருக்கும். வரக்கூடிய டிசம்பர் 15ஆம் தேதிக்குள் அதிமுக இணைவது பற்றி முக்கிய முடிவை அறிவிக்க வேண்டும். டிசம்பர் 15ஆம் தேதி நாம் எடுக்கின்ற முடிவு அரசியல் வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக அமையும்.

நான் ஏற்றுக்கொண்டிருக்கின்ற ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு ஏற்ற வகையில் பல்வேறு பிரச்சனைகளுக்குள் நான் உள்ளே சென்று மீண்டும் அதை பூதாகரமாக வெளிப்படுத்த விரும்பவில்லை. நீங்கள் திருந்தவில்லை என்றால் டிசம்பர் 15ஆம் தேதி திருத்தப்படுவீர்கள். உங்களுக்கு ஆதரவாக இருக்கும் மக்கள் ஏமாற்றம் அடையக்கூடிய வகையில் எந்த விதமான முடிவுகளையும் எடுப்பதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். கழகம் ஒருங்கிணைக்க வேண்டும், அப்படி நடைபெறவில்லை என்றால், எங்களுடைய முடிவை தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ளும் நிலைக்கு எங்களை தள்ளிவிடாதீர்கள்” என்று ஆவேசமாகப் பேசினார். 

admk edappadi palanisami O Panneerselvam
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe