அதிமுகவில் பிரிந்து சென்ற தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் கட்சியின் உறுப்பினர்கள் அனைவரும் ஒன்று சேர வேண்டும் என அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களைச் சந்தித்து கருத்து தெரிவித்திருந்தார். மேலும் அதற்கென காலக்கெடுவையும் அவர் நிர்ணயித்திருந்தார். அதோடு கட்சியின் தலைமை இது குறித்து உரிய முடிவை எடுக்க வேண்டும் என்றும் செங்கோட்டையன் தெரிவித்திருந்தார். இதனையடுத்து அவர் அண்மையில் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனையும் சந்தித்துப் பேசியதாகத் தகவலும் வெளியாகியிருந்தது. இருப்பினும் அதனை செங்கோட்டையன் மறுத்திருந்தார்.
இத்தகைய சூழலில் தான் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 118வது பிறந்த நாள் விழா மற்றும் 63வது குருபூஜை, ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் இன்று (30.10.2025) நடைபெற்று வருகிறது. இதனையொட்டி குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதா கிருஷ்ணன், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு மரியாதை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் தான் பசும்பொன்னில் நடைபெற்று வரும் முத்துராமலிங்க தேவரின் குரு பூஜையில் கலந்து கொள்ள மதுரை மாவட்டம் கோரிப்பாளையத்திற்கு செங்கோட்டையனும், ஓ. பன்னீர்செல்வமும் தனித்தனியாக காரில் வந்துள்ளனர்.
அதன் பின்னர் கோரிப்பாளையத்தில் இருந்து உள்ள ஹோட்டல் ஒன்றில் இருவரும் சந்தித்து பேசியுள்ளனர். அதன் பின்னர் அவர்கள் இருவரும் பசும்பொன்னுக்கு ஒரே வாகனத்தில் புறப்பட்டுச் சென்றனர். மேலும் அவர்களுடன் டிடிவி தினகரனும் இனைந்து ஒரே காரில் செல்லவுள்ளதாகவும் கூறப்பட்டது. அங்கு மூவரும் ஒன்று சேர்ந்து முத்துராமலிங்க தேவருக்கு மரியாதை செலுத்த உள்ளதாகக் கூறப்பட்டது. இந்நிகழ்வு அதிமுக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பசும்பொன் அருகே செங்கோட்டையன், ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் டிடிவி தினகரனை சந்தித்து பேசியுள்ளனர். அதனைத் தொடர்ந்து பசும்பொன்னுக்கு வரவுள்ள சசிகலாவையும் இவர்கள் மூவரும் சந்தித்து பேச உள்ளதாக கூறப்படுகிறது.
முன்னதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பசும்பொன்னில், பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜை மற்றும் ஜெயந்தி விழாவில் பங்கேற்றார். அதனைத் அவர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவரிடம், “ ஓ. பன்னீர்செல்வம் செங்கோட்டையன் ஆகியோர் ஒரே காரில் பயணம் கொண்டது...” குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு எடப்பாடி பழனிசாமி, “அதுபற்றி தெரியவில்லை. அவர்கள் வந்தால் தான் தெரியும். அவ்வாறு வந்தால் நான் பதில் சொல்றேன்” எனத் தெரிவித்தார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/10/30/ops-sengottaiyan-car-ttv-dhinakaran-2025-10-30-13-07-07.jpg)