Advertisment

“செங்கோட்டையன் நல்ல செய்தி சொல்வார்” - ஓ.பி.எஸ். நம்பிக்கை!

ops-pm-dgl

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், அக்கட்சியின் மூத்த நிர்வாகியாக இருந்த கே.ஏ. செங்கோட்டையனுக்கும் இடையே கடந்த சில மாதங்களாக மோதல் போக்கு நிலவி வந்தது. இது குறித்து கடந்த 05ஆம் தேதி (05.09.2025) செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன், “கட்சி ஒன்றுபட வேண்டும். வெளியே சென்றவர்களை அரவணைத்தால் மட்டுமே தேர்தல் களத்தில் வெற்றி பெற முடியும். ‘மறப்போம், மன்னிப்போம்’ என்று பிரிந்தவர்களை ஏற்றுக்கொள்ள வேண்டும். எனது கோரிக்கையை பழனிசாமி ஏற்றால், அவரது பரப்புரையில் பங்கேற்பேன். 

Advertisment

10 நாட்களுக்குள் கட்சியில் அனைவரையும் ஒன்றிணைக்க வேண்டும். இல்லையெனில், ஒத்த கருத்துடையவர்களை ஒருங்கிணைக்கும் முயற்சிகளில் இறங்கத் தயாராக இருக்கிறோம்,” என்று தெரிவித்தார். இதனையடுத்து ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர், கட்சியின் செயற்குழு உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்து செங்கோட்டையனை நீக்கி, எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். இத்தகைய சூழலில் தான் ஹரித்துவார் ஆன்மீக பயணம் செல்வதாகச் சொல்லிவிட்டு டெல்லி கிளம்பிய செங்கோட்டையன் டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவைச் சந்தித்துப் பேசியிருந்தார். 

இந்நிலையில் தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளருமான ஓ. பன்னீர்செல்வம் இன்று (14.09.2025) திண்டுக்கல்லில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “திரும்பவும் செங்கோட்டையன் ஒரு நல்ல செய்தி சொல்லுவார். சசிகலாவைச் சந்திப்பதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன. உரிய நேரத்தில் சந்திப்பேன். விஜய்யுடன் கூட்டணி தொடர்பான கேள்விக்கு ஏற்கனவே பதில் சொல்லிவிட்டேன். எதிர்காலத்தில் எதுவும் நடக்கலாம் . அது நல்லதும் நடக்கலாம். டெல்லி போவதற்குப் பயணங்கள் தற்போது இல்லை. நயினார் நாகேந்திரன் 2 தினங்களுக்கு முன்னாள் போனில் பேசினார். மத்திய அமைச்சர் அமித்ஷாவைச் சந்திக்கப்போவதில்லை” எனத் தெரிவித்தார்.

Amit shah nainar nagendran b.j.p Delhi K. A. Sengottaiyan admk O Panneerselvam
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe