அதிமுகவின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் கட்சியின் சட்ட திட்ட விதிகள் 19 உட்பிரிவு 7 மற்றும் 25 உட்பிரிவு 2இன்படி, சென்னை வானகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்று (10.12.2025) நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலை வகித்தார். இந்த கூட்டத்தின் தொடக்கத்தின் போது, விழா மேடையில் அமைக்கப்பட்டிருந்த முன்னாள் முதல்வர்களான எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் படங்களுக்கு எடப்பாடி பழனிசாமி மலர் தூவி மரியாதைச் செலுத்தினார். அதே சமயம் அக்கட்சியின் அவைத் தலைவரும், இன்றைய கூட்டத்திற்கு தலைமை தாங்க வேண்டிய தமிழ்மகேன் உசேனுக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டது.
இதன் காரணமாக செயற்குழுவின் தற்காலிக அவைத் தலைவராக, அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் கே.பி. முனுசாமி நியமிக்கப்பட்டு செயற்குழு நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில், “பொது எதிரியை வீழ்த்த, ஒத்த கருத்துடைய கட்சிகள் கால சூழ்நிலைக்கேற்ப ஒன்றிணைந்து, திமுக ஆட்சியை வீழ்த்துவதற்கு, தமிழ் நாட்டில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில், அதிமுக - பாஜகவுடன் கூட்டணி அமைத்ததற்கு, 2.5.2025 அன்று நடைபெற்ற கட்சியின் செயற்குழு கூட்டத்தில் அங்கீகாரம் அளித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு இப்பொதுக்குழு முழுமனதுடன் ஒப்புதல் அளிக்கிறது” எனத் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் செய்தியாளார்கள் இது தொடர்பாக கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதிலளித்து பேசுகையில், “நீங்கள் (செய்தியாளர்கள்) அவர்களிடம் (அதிமுகவினரிடம்) தானே கேட்க வேண்டும். தமிழ்நாடு நன்றாக இருக்க வேண்டும் என்று விரும்புகிற அனைவருமே, விரும்புவது பிரிந்து கிடக்கின்ற அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சக்திகள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று தான் விரும்புகிறார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/12/10/ops-pm-2025-12-10-12-44-29.jpg)