Advertisment

“நான் ரெடி.... அருமை அண்ணன் எடப்பாடி பழனிசாமியும் ரெடியா?” - ஓ.பி.எஸ். கேள்வி!

ops-theni-pm

தமிழகச் சட்டமன்றத் தேர்தலையொட்டி அரசியல் கட்சிகள் தீவிரமாகத் தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ள திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளும், ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அ.தி.மு.க. - பா.ஜ.க அடங்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணியும் தேர்தல் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. இது தவிரச் சீமானின் நாம் தமிழர் கட்சி, விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் ஆகிய கட்சிகள் தேர்தலில் போட்டியில் உள்ளன. இதனால் தமிழகச் சட்டமன்றத் தேர்தல் களத்தில் நான்கு முனை போட்டி நிலவுகிறது.

Advertisment

இந்நிலையில் தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளருமான ஓ. பன்னீர்செல்வம் தேர்தல் கூட்டணி தொடர்பாகத் தனது சொந்த ஊரான தேனி மாவட்டம் பெரியகுளத்தில் தனது ஆதரவாளர்களுடன் இன்று (29.01.2026) ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் நிர்வாகிகளின் விருப்பத்தைத் துண்டுச் சீட்டில் எழுதித்தர  ஓ. பன்னீர்செல்வம் அறிவுறுத்தியதாகவும், அதற்குத் துண்டுச் சீட்டு வேண்டாம், நீங்கள் எடுக்கும் முடிவுக்குக் கட்டுப்படுவோம் என நிர்வாகிகள் அவரிடம் தெரிவித்ததாகவும் இதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததால் கூட்டத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது

Advertisment

இந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு ஓ. பன்னீர்செல்வம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “பிரிந்துக் கிடக்கக்கூடிய அதிமுக சக்திகள் ஒன்றிணைய வேண்டும். யாராலும் வெல்ல முடியாத இயக்கமாக அதிமுகவை ஜெயலலிதா உருவாக்கினார். அந்த நிலையை மீண்டும் உருவாக்க வேண்டும். அதற்கான போராட்டம் தான் எங்கள் சட்டப் போராட்டம் ஆகும். அதிமுகவை மீட்க நாங்கள் போராடிக் கொண்டிருக்கிறோம். 

ops

ஆதரவாளர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கடந்த நாடாளுமன்ற பொதுத் தேர்தலின் போது ராமநாதபுரத்தில் போட்டியிட முடிவெடுத்தேன். தொண்டர்களின் ஆதரவை நிரூபிக்கவே தேர்தலில் போட்டியிட்டேன். என்னைத் தோற்கடிக்க எனக்கு எதிராக 6 பேரைப் பன்னீர்செல்வம் என்ற பெயரில் போட்டியிட வைத்தனர். இவ்வாறு பல்வேறு சூழ்ச்சிகள் நடைபெற்றன. சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வேண்டும் என்ற முடிவை இதுவரை எடுக்கவில்லை. தனிக்கட்சி தொடங்கும் எண்ணமும் இல்லை. அதிமுக ஒன்றிணைய நான் ரெடி. அதற்கு டிடிவி தினகரனும், அவருடைய அருமை அண்ணன் எடப்பாடி பழனிசாமியும் ரெடியா? என்று கேட்டுச் சொல்லுங்கள்” எனத் தெரிவித்தார். 

admk edappadi k palaniswami O Panneerselvam ops Theni TTV Dhinakaran
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe