Advertisment

முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ஓ.பி.எஸ். மீண்டும் சந்திப்பு!

ops-mks-meet

தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் வழக்கமாக மேற்கொள்ளும் நடைப்பயிற்சியில் கடந்த 21ஆம் தேதி (21.07.2025) ஈடுபட்டிருந்தார். அப்போது அவருக்கு லேசான தலைச்சுற்றல் ஏற்பட்டது. இதனையடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டார். அதன்படி முதல்வர் மு.க. ஸ்டாலின் மருத்துவமனையில் 7வது நாளாகக் கடந்த ஞாயிற்றுக்கிழமை (27.07.2025) வரை சிகிச்சை பெற்று வந்தார். அதன் பின்னர் அன்று மாலை டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் வீடு திரும்பினார். 

Advertisment

இத்தகைய சூழலில் தான் 10 நாட்களுக்குப் பிறகு முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று (31.07.2025) காலை தலைமைச் செயலகம் வருகை தந்து பல்வேறு துறைகளின் முடிவுற்ற திட்டப்பணிகளைத் தலைமைச் செயலகத்தில் இருந்தவாறு காணொளி காட்சி வாயிலாகத் தொடங்கி வைத்தார். முன்னதாக முதல்வர் மு.க. ஸ்டாலினை, தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளருமான ஓ. பன்னீர்செல்வம் நேற்று காலை சந்தித்துப் பேசினார். அடையாறு பூங்காவில் காலை நடைப்பயிற்சி சென்றபோது இருவரும் சந்தித்துப் பேசிக் கொண்டார். அப்போது முதல்வர் மு.க. ஸ்டாலினிடம், ஓ. பன்னீர்செல்வம் நலம் விசாரித்ததாகக் கூறப்பட்டது. 

Advertisment

மற்றொருபுறம் ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் அவரது ஆதரவாளர்களோடு நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு தனது உறவை முறித்துக் கொண்டுள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இனி தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு இடம்பெறாது. எந்த கட்சியுடனும் கூட்டணி என்பது இன்றைய நிலையில் இல்லை. எதிர்காலத்தில் நிலைமைகளுக்கேற்ப கூட்டணியை முடிவு செய்யவும் தீர்மானிக்கப்பட்டது என முடிவெடுக்கப்பட்டது. 

அதன் பின்னர் ஓ.பன்னீர்செல்வம், முதல்வர் மு.க. ஸ்டாலினை அவரது  இல்லத்தில் நேற்று மாலை சந்தித்து உடல் நலம் குறித்து விசாரித்தார். இந்நிலையில் 2வது நாளாக இன்றும் (01.08.2025) நடைப்பயிற்சியின் போது முதல்வர் மு.க. ஸ்டாலினை ஓ. பன்னீர்செல்வம் சந்தித்துப் பேசியுள்ளார். இதன் மூலம் இரு நாட்களில் 3வது முறையாக முதல்வர் மு.க. ஸ்டாலினை ஓ.பன்னீர்செல்வம் சந்தித்துப் பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

dmk Adayar mk stalin O Panneerselvam
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe