கோப்புப்படம்
2026 - 2027ஆம் நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்காகத் தமிழ்நாடு சட்டப்பேரவை கடந்த 17ஆம் தேதி (17.02.2026) காலை 09:30 மணிக்குக் கூடியது. அப்போது இடைக்கால நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்து உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து வேளாண் இடைக்கால பட்ஜெட்டை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்து உரையாற்றினார்.
அதனைத் தொடர்ந்து இடைக்கால பட்ஜெட் குறித்த விவாதம் சட்டப் பேரவையில் நேற்று முன்தினம் (18.02.2026) தொடங்கியது. அந்த வகையில் நேற்றும், நேற்று முன்தினமும் என இரு நாட்கள் பட்ஜெட் மீதான விவாதங்கள் நடைபெற்றது. இத்தகைய சூழலில் தான் இடைக்கால நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்திற்கு அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஆகியோர் சட்டப்பேரவையில் இன்று (20.02.2026) பதிலளித்துப் பேசினார்கள். இருப்பினும் அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் அவைக்கு வராமல் புறக்கணித்தனர். அதே சமயம் அவை நடவடிக்கையில் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் இன்று முழுமையாக பங்கேற்றார்.
இந்நிலையில் சட்டப்பேரவையில் முதல்வர் மு.க. ஸ்டாலினை, முன்னாள் ஓ.பன்னீர்செல்வம் பூங்கொத்து கொடுத்து சந்தித்து பேசியுள்ளார். அதாவது சட்டபேரவையில் அமைச்சர்களின் பதிலுரை முடிவடைந்த பிறகு முதல்வர் அவைக்குள் வரும் போது அவரை பார்ப்பதற்கு வாயில் அருகே ஓ. பன்னீர்செல்வம் காத்திருந்து முதலல்வர் மு.க. ஸ்டாலினை அவரது அறையில் அறையில் சுமார் 10 நிமிடங்கள் சந்தித்து பேசியுள்ளார். பொதுவாக மரியாதை நிமித்தமாக சந்திப்பு என்று பொதுவாக சொல்லப்பட்டாலும் இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
Follow Us