கடந்த 2024ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சார்பில் நவாஸ் கனி வேட்பாளராகப் போட்டியிட்டார். இவரை எதிர்த்து சுயேச்சையாக முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் போட்டியிட்டார். இதில் நவாஸ் கனி ஒரு லட்சத்து 66 ஆயிரத்து 782 வாக்கு அதிகம் பெற்று வெற்றி பெற்றார். இதில் நவாஸ் கனி வெற்றி பெற்றதில் முறைகேடு நடந்துள்ளதாகக் கூறி அவருடைய வெற்றியைச் செல்லாது என்று அறிவிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஓ. பன்னீர்செல்வம் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கில் சாட்சியம் அளிப்பதற்கு ஏதுவாக 35 ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி சி.வி. கார்த்திக் அமர்வில் இன்று (18.12.2025) விசாரணைக்கு வந்தது. இதற்கு ஓ. பன்னீர்செல்வம் நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்தார். அப்போது அவரிடம் நவாஸ் கனி எம்பி தரப்பில் மூத்த வழக்கறிஞர் சித்திரா சம்பத் ஆஜராகி சரமாரியாக பல்வேறு கேள்விகளை எழுப்பினார். அதாவது ஓ. பன்னீர்செல்வம் தாக்கல் செய்த வேட்பு மனுவில் குறிப்பிட்டிருந்த தொழில்கள் மூலம் கிடைத்த வருமானம் குறித்து சில கேள்விகள் எழுப்பப்பட்டன. அதற்குப் பதிலளித்த ஓ. பன்னீர்செல்வம், “பால் பண்ணை வைத்திருக்கிறேன். 40 மாடுகள் மூலம் வருமானம் கிடைத்து வருகிறது.
அந்த வருவாய் குடும்ப செலவுக்காகப் பயன்படுத்துகிறேன். மாடு வளர்ப்பு, விவசாயம் நிலங்கள் மட்டுமல்லாமல் பல தொழில்கள் செய்து வருகின்றேன்” எனத் தெரிவித்தார். மேலும் வேட்பு மனுவில் குறிப்பிட்டுள்ள நிலங்கள் தொடர்பான சில கேள்விகளை வழக்கறிஞர் சித்ரா சம்பத் எழுப்பி இருந்தார். அதற்கு ஓ. பன்னீர்செல்வம், ”எனக்கு நினைவில்லை” என்று தெரிவித்தார். அதற்கு வழக்கறிஞர், “ஒரு மாநிலத்தின் நிதியமைச்சராக நீங்கள் இருந்திருக்கிறீர்கள். முன்னாள் முதலமைச்சர் உங்களுக்கு நினைவில்லையா? என்று கேள்வி எழுப்பினார். இதற்கு ஓ. பன்னீர்செல்வம், “இந்த விஷயங்கள் எனது ஆடிட்டருக்கு மட்டுமே தெரியும்” எனத் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளிப்பதில் சிரமம் அடைந்த ஓ. பன்னீர்செல்வம், சற்று கோபமாகவே சில கேள்விகளுக்குப் பதிலளித்தார்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/12/18/hc-2025-12-18-20-16-56.jpg)
அதாவது , “நான் தான் இந்த தேர்தல் வழக்கைத் தொடர்ந்துள்ளேன். என்னிடமே இந்த கேள்விகளைக் கேட்கிறீர்கள். இதில் நவாஸ்கனிக்கு எதிராகத்தான் வழக்கு தொடரப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார். மேலும் பஞ்சமி நிலம் வாங்கியது தொடர்பாக சில கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த ஓ. பன்னீர் செல்லும், “நான் வாங்கியது பஞ்சமி நிலம் என்று தெரிந்த பிறகு அவற்றை ஒப்படைத்து விட்டேன்” எனத் தெரிவித்தார். இவ்வாறு குறுக்கு விசாரணை சென்று கொண்டிருந்தது. இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி இந்த வழக்கு விசாரணையை வரும் ஜனவரி 9ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/12/18/ops-2025-12-18-20-13-43.jpg)