வாக்காளர் சிறப்புத் திருத்தப் பணிகள் தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்களில் தொடங்குவதாக என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்தியத் தேர்தல் ஆணையத்தினுடைய அறிவிப்பின்படி தமிழக தலைமைச் செயலகத்தில் கடந்த 27 ஆம் தேதி மாலை 6 மணியளவில் அவசர கூட்டம் நடைபெற்றது. தமிழகத்தில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுடன் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம் தொடர்பாக ஆலோசனை நடத்த இருப்பதாக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் ஐஏஎஸ் மூலமாக இந்த தகவல் வெளியாகி இருந்தது.
அதன்படி இன்று (29/10/2025) தலைமைச் செயலகத்தில் அர்ச்சனா பட்நாயக் தலைமையில் இந்த கூட்டம் தொடங்கியது. இக்கூட்டத்தில் திமுக, அதிமுக, பாஜக, மதிமுக, விசிக, நாம் தமிழர், தேமுதிக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் பங்கேற்றுள்ளனர்.
கூட்டம் முடிந்து செய்தியாளர்களைச் சந்தித்த திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசுகையில், ''மழைக்காலத்தில் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பணிகளை செய்வது ஏன்? தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை உள்நோக்கம் கொண்டதாக இருக்கிறது. நான்கு மாநிலங்களில் தேர்தல் நடக்க உள்ள நிலையில் உள்நோக்கத்தோடு அவசர கோணத்தில் எஸ் ஐ ஆர் கொண்டுவரப்பட்டுள்ளது. ஏற்கனவே முறையான வாக்காளர் பட்டியல் தயாரிக்க வேண்டும் என ஆணையத்திற்கு மனு அளிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
அதேபோன்று கூட்டத்தில் கலந்துகொண்ட அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசுகையில், ''வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பணிகளை அதிமுக வரவேற்கிறது. ராயபுரம் தொகுதியில் மட்டும் பல்வேறு இறந்தவர்களின் வாக்குகள் உள்ள நிலையில் குறித்து நாங்கள் ஏற்கனவே தேர்தல் ஆணையத்தில் வலியுறுத்தி வந்தோம். இரட்டை வாக்கு பதிவு, இறந்தவர்களின் வாக்குகள், முகவரி இல்லாதவர்கள் வாக்குகள் ஒவ்வொரு பூத்திலும் உள்ளன'' என்றார்.
பாஜக சார்பில் கூட்டத்தில் கலந்து கொண்ட கரு.நாகராஜன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், ''வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பணிகளை பாஜக முழுமையாக வரவேற்கிறது. சிறப்பு தீவிர திருத்தப்பணி அவசியமானது. அதில் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும்'' என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/10/29/a5688-2025-10-29-19-56-02.jpg)