ஜார்க்கண்டின் குந்தி மாவட்டத்தில் ஜியாரப்பா கிராமத்தைச் சேந்தவர் சோமா முண்டா. இவர் அந்த பகுதியிலுள்ள 22 கிராமங்களின் பாரம்பரியத் (பழங்குடியினர்) தலைவரான 'அடெல் சங்கா பதா ராஜா' ஆவார். மேலும், இவர் அபுவா ஜார்க்கண்ட் கட்சி (ஏஜேபி) சார்பில் குந்தி தொகுதியில் 2024 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டவர். இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு, முண்டா தனது மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தார், ​​அப்போது சில மர்ம நபர்களால் நம்கும் - ஜமுவாடாக் சாலையில் முண்டா சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த விசாரணையில், ஜியாரப்பா கிராமத்தில் 3.16 ஏக்கரில் பரந்த நிலபகுதி ஒன்று உள்ளது. அந்த நிலத்தில் தொடர்ந்து பல ஆண்டுகளாக அந்தப்பகுதி மக்களின் 'பதா யாத்ரா மேளா' என்ற பாரம்பரியத் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. இந்த சமயத்தில், ராஞ்சியைச் சேர்ந்த தேவ்ரத் நாத் ஷாதேவ், இந்த நிலத்தின் உரிமையாளர்களின் வாரிசுகளிடமிருந்து தான் இந்த நிலத்தை வாங்கியுள்ளதாகக் கூறியதுடன், உள்ளூர் மக்களின் உதவியுடன் அந்த நிலத்தை விற்க முயன்றுள்ளார். இதற்கு, முண்டாவும் மற்ற சில கிராம மக்களும், இந்த நிலத்தை விற்பனை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இருந்தபோதிலும் கடந்த நவம்பரில், நிலத்தை விற்பனை செய்யும் பொருட்டு, அந்த இடத்தை சமப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, அங்கிருந்த கல் அடையாளங்களும் அகற்றப்பட்டன.
இதற்கு சோமா முண்டா எதிர்ப்பு தெரிவித்தார். இதன் காரணமாக, எதிர்தரப்பினரால் ஒரு சதித்திட்டம் தீட்டப்பட்டு, அவர் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்” எனத் தெரியவந்துள்ளது. இது குறித்து காவல் கண்காணிப்பாளர் மணீஷ் டோப்போ, "இந்த வழக்கில் தீவிரமாக விசாரணை நடைபெற்று வருகிறது. இதுவரை, முக்கியக் குற்றவாளி உட்பட ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த குற்றத்தில் ஈடுபட்ட, இரண்டு துப்பாக்கி வைத்திருந்த நபர்கள் மற்றும் சிலரையும் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது," என்று தெரிவித்தார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/01/14/siren-arrested-2026-01-14-21-39-54.jpg)