தேனி மாவட்டம், வீரபாண்டி பேரூராட்சி பகுதியில் பட்டியலின மக்களின் சுடுகாடு மற்றும் நீர்நிலை ஓடையை ஆக்கிரமித்து மின் மயானம் அமைக்கும் முயற்சிக்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

Advertisment

வீரபாண்டி பேரூராட்சி பகுதியில் பட்டியலின மக்களுக்காக சுடுகாடு உள்ளது. இந்த சுடுகாடு நீர்நிலை ஓடையின் அருகே அமைந்துள்ளது. இந்தச் சுடுகாட்டிற்கு சுற்றுச்சுவர் மற்றும் எரியூட்டும் கொட்டகை கட்டி முடிக்கப்பட்டு, இதுவரை பட்டியலின மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படவில்லை. 

Advertisment

இந்நிலையில், தற்போது பட்டியலின மக்களின் சுடுகாடு மற்றும் நீர்நிலை ஓடையை ஆக்கிரமித்து மின் மயானம் கட்டும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இதற்கு பட்டியலின மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.  மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, பட்டியலின மக்களின் சுடுகாட்டில் கட்டப்படவுள்ள மின் மயானத்தை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.