Advertisment

2026-2027 பட்ஜெட்டில் கேரளா புறக்கணிப்பு?; நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் ஆர்ப்பாட்டம்

oppo

Opposition MPs struggle in Parliament for accused Kerala boycott in 2026-2027 budget?

மக்களவையில் 2026-27 ம் ஆண்டிற்கான  பட்ஜெட் நேற்று (01-02-26) தாக்கல் செய்யப்பட்டது. இதில் கொண்டுவரப்பட்டுள்ள பல்வேறு வரி மாற்றங்கள் பலதரப்பட்ட பொருட்களின் விலையில் மாற்றத்தை ஏற்படுத்த உள்ளன.குறிப்பாக, இந்த பட்ஜெட்டில் மருத்துவம் மற்றும் தொழில் நுட்பத்துறை போன்றவற்றிற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாகக்  கூறப்படுகிறது. இதன் காரணமாக, குறிப்பிடத்தக்க வகையிலான மருந்து பொருட்கள் மற்றும் மின்னணு சாதனங்கள் போன்ற பொருட்களின் விலை குறைய  இருப்பதாகக் கூறப்படுகிறது.

Advertisment

இந்த நிலையில், மத்திய அரசின் பட்ஜெட்டில் கேரளம் புறக்கணிக்கப்பட்டிருப்பதாக, எதிர்க்கட்சி எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். விரைவில், தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால், இம்மாநிலங்களுக்கு புதிய அறிவிப்புகள் வரும் என எதிர்பாக்கப்பட்டது. ஆனால், குறிப்பிடத்தகுந்த அறிவிப்புகள் எதுவும் இல்லாததால், இந்த பட்ஜெட் ஏமாற்றம் அளிப்பதாக கேரளா எதிர்க்கட்சி எம்பிக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Advertisment

கடந்த பட்ஜெட் தாக்கலின் போது பீகாரில் பொதுத் தேர்தல் வரவிருந்ததால், அந்த பட்ஜெட்டில் பீகாருக்கு பல்வேறு அறிவிப்புகள் வெளியாகின. அதைப்போலவே, தற்போது தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்குத் தேர்தல் வரவிருப்பதால், இம்மாநிலங்களுக்கு இந்த பட்ஜெட்டில் பல்வேறு புதிய அறிவிப்புகள் வரும் என எதிர்பார்க்கப்பட்டது. அவ்வாறு எந்த அறிவிப்பும் வராதது ஏமாற்றம் அளிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. இந்த பட்ஜெட் கேரளா மக்களுக்கு விரோதமானது என்ற பதாகைகளுடன், அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதே நேரத்தில், மக்களின் முக்கிய பிரச்சனைகள் குறித்து இந்த பட்ஜெட்டில் எந்த வித அறிவிப்பும் இல்லை எனக் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இந்த பட்ஜெட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

budget Kerala PARLIAMENT SESSION Budget 2026
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe