Advertisment

“இனியும் அதிமுகவில் பயணிப்பது தன்மானத்திற்கு கேடானது” - முதல்வர் முன்பு ஓ.பி.எஸ் பேச்சு!

opsmk

O.panneerselvam criticizing amdk before the Chief Minister m.k.stalin

தமிழக சட்டமன்றத் தேர்தல் விரைவில் வரவுள்ள சூழ்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் முன்னாள் முதல்வரும், அதிமுக மூத்த தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். மேலும் அதிமுக முன்னாள் எம்.பி.யும், ஓ.பன்னீர்செல்வத்தின் மகனுமான ஓ.பி. ரவிந்தரநாத், ஓ.பன்னீர்செல்வத்தின் அவரது ஆதரவு எம்.எல்.ஏ. ஐயப்பனும் திமுகவில் இணைத்துக் கொண்டனர். அதனை தொடர்ந்து, போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ஓ.பன்னீர்செல்வம் ராஜினாமா செய்தார்.

Advertisment

இந்த நிலையில், ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் திமுகவில் இணையும் நிகழ்ச்சி மதுரையில் இன்று (07-03-26) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். இந்த நிகழ்வில் பேசிய ஓ.பன்னீர்செல்வம், “என்னுடைய 50 ஆண்டு கால அரசியல் வாழ்வில் நான் ஏற்றுக்கொண்ட தலைமைக்கு விசுவாசமாகவும், கொண்ட கொள்கைக்கு நேர்மையாகவும் கொடுத்த பணிக்கு மனசாட்சியுடனும் நன்றியுடனும் நான் பணியாற்றி இருக்கிறேன். நான் இருந்த இயக்கத்தில் எனக்கென்று ஒரு தனி அணியையோ நான் என்றும் உருவாக்கியதில்லை, உருவாக்க வேண்டும் என்று நான் என்றுமே எண்ணியதில்லை. கட்சியின் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு  என்னுடைய கடமையை ஆற்றி வந்திருக்கிறேன். எம்ஜிஆரால் ஆரம்பிக்கப்பட்ட அதிமுக, இன்றைக்கு அதிமுகவாக இல்லை. திருத்தக்கூடாத கழக விதியாக இருந்த தொண்டர்கள் தான் தலைமைகளை தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற எம்ஜிஆரின் விதி திருத்தப்பட்டது, தொண்டர்களின் உரிமை பறிக்கப்பட்டது. ஜெயலலிதா வழிநடத்திய அதிமுக இன்றைக்கு இல்லை. தனக்கான தன் பதவியை மட்டுமே குறியாக கொண்ட ஒருவரின் ஒரு சுயநில அரசியலால் எம்ஜிஆர் உருவாக்கிய அதிமுக அபகரிப்பு திமுகவாக இன்றைக்கு மாறியிருக்கிறது.

Advertisment

பெரியார் தந்த திராவிட சித்தாந்தத்திற்கு எதிராகவும் அண்ணா தந்த சமூக நிதிக்கு முரணாகவும் செயல்பட்டு வருகிறது. பறிக்கப்பட்ட உரிமைகளை மீட்க சட்ட போராட்டத்தினையும் நான் நடத்தினேன். தலைமைக்கு உண்மையாக உழைத்ததற்கு தலைமைக்கு விசுவாசமாக நடந்து கொண்டதற்காக குறுக்கு வழியில் வந்தவர்களால் நான் எப்படி எல்லாம் பழிவாங்கப்பட்டுள்ளேன் என்பதை உங்கள் அனைவருக்கும் நன்றாகவே தெரியும். அப்படி பழிவாங்கப்பட்ட என்னை அன்போடு அழைத்து பண்போடு பாசம் காட்டி ஜெயலலிதாவின் அரவணைப்பை எனக்கும், என்னை சார்ந்தவர்களுக்கும் வழங்கி இருக்கிற கரம்பிடித்து வழிகாட்டிய  தலைவர் அவர்தான் மான்மிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். சட்டத்தை வளைத்து திட்டம் போடலாம், கழக சட்டவிதியை மாற்றி வட்டமும் போடலாம், தொண்டர்களின் உரிமைகளை பறித்துவிட்டு தொண்டை கிழிய கத்தலாம், கட்சியை கைப்பற்றலாம். ஆனால் வெற்றி பெற முடியுமா என்றால் இல்லை, தொடர் தோல்வி தானே தொடர்கதையாக அங்கே இருக்கிற சுயநல பிடித்த அகம்பாவம் பிடித்தவர்களுக்கு இருக்கிறது. இனியும் அவர்கள் தோல்வி தொடர்ந்து கொண்டேதான் இருக்கும். எட்டு  தோல்வி அல்ல, பத்து தோல்வி அல்ல அவர்கள் வாழ்நாள் முழுவதும் என்னும் தோல்வியைதான் அவர்கள் காணப்போகிறார் என்பதனை இங்கே நிறுவி இருக்கின்ற கூட்டம் விரிவித்து காட்ட இருக்கிறது. எம்ஜிஆர் ஆரம்பித்த அதிமுக இன்று இல்லை. ஜெயலலிதா வளர்த்த அதிமுக இன்று இல்லை. இது இன்று அபகரிப்பு திமுகவாகத்தான் மாறியிருக்கிறது மாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது.

இனிமேலும் அதில் பயணிப்பது தன்மானத்திற்கு கேடானது, திராவிடத்திற்கு மாறானது என்பதை உணர்ந்துதான் 75 ஆண்டுகளுக்கு மேலாக திராவிட சித்தாந்தத்தையும், சமூக நீதியையும் தடம் பிறழாமல் காக்கும் திராவிட முன்னேற்ற கழகம், அதை தலைமையேற்று சிறப்பாக வழிநடத்தும் கழக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையினை ஏற்று  தாய் கழகமான திராவிட முன்னேற்ற கழகத்தில் ஒரு தொண்டனாகத்தான் நான் இன்றைக்கு இணைத்துக் கொண்டிருக்கிறேன். அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு கழகத்தை அண்ணா கண்ட திமுகவில் இணைப்பதில் நான் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மனம் என்றார் பேரறிஞர் அண்ணா. அதனை அப்படியே ஏற்றி இன்று தாயன்புடன்  என்னையும் என்னுடன் பயணித்த உடன்பிறப்புகளையும் அன்போடு அரவணைத்து, பண்போடு பாசம் காட்டும் தந்தை பெரியாரின் சுயமரியாதையையும்  தன்மானத்தையும், பேரறிஞர் அண்ணாவின் அறிவையும் தெளிவையும், பெற்றுள்ள முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞரின் தமிழ்மொழி பற்றையும் அரசியல்  ஞானத்தையும் ஜெயலலிதாவின் விவேகத்தையும் ஒருங்கே பெற்றுள்ள திராவிட ஆட்சியின் நாயகர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தான் தமிழ்நாடு மட்டுமல்லாமல் இந்திய திருநாடே பாராட்டிக் கொண்டிருக்கிறது.

தமிழகத்தை பொறுத்தவரை தேசியம் என்ற பெயரில் மதவாத அரசியல் என்பது வெறும் பேச்சு, வெற்று பேச்சு. இங்கு எப்போதும் திராவிடமே நமர் உயிர் மூச்சு. நம்முடைய இந்த இணைப்பு சிலருக்கு வெறுப்பை தந்திருக்கிறது, சிலருக்கு தூக்கத்தைதையும் கெடுத்திருக்கிறது. எதிரணியின் வெற்றி வாய்ப்பை முற்றிலுமாக தடுத்திருக்கிறது என்றால் அதன் மூல காரணமாக இருப்பவர் கண்ணுக்கட்டிய தூரமே எதிரிகளே இல்லை என்ற சொல்லை நடைமுறைப்படுத்துகிறவர் பதராத பண்பாளர், சிதராத சிந்தனையாளர், கட்சியை மட்டுமல்ல ஆட்சியை வழிநடத்துவதிலும் சரி, தோழமை கட்சியினரை மாண்போடு நடத்துவதிலும் சரி, இவரைப்போல ஒரு பக்குவப்பட்ட தலைவர் இந்தியாவிலே இல்லை என்ற நிலை இன்றைக்கு ஏற்பட்டிருக்கிறது. என் வாழ்நாளில் திராவிட கொள்கைகளை என் உயிர் மூச்சாக கடைபிடித்து அதில் சிந்தாந்தத்தையும் விட்டுக் கொடுக்காமல் கட்டிக்காக்கும் மு.க.ஸ்டாலின் தலைமையில் செயல்படுவேன் என்பதை என் வாழ்நாள் லட்சியமாக என்று நான் தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன். அவர் கடந்த ஐந்த ஆண்டு காலம் ஒரு சிறப்பான ஆட்சியை நாட்டு மக்களுக்கு தந்த தந்து கொண்டிருக்கிறார்கள். மக்களுக்கு என்ன தேவையோ, மக்களுடைய அடிப்படை தேவைகள் என்ன தேவையோ, அரசியல் மூலமாக பல்வேறு திட்டங்களை  அர்ப்பணித்துக் கொண்டிருக்கின்ற தலைவராக, முதலமைச்சராக இன்றைக்கு வளம் வந்து கொண்டிருக்கிறார்” என்று கூறினார். 

O Panneerselvam mk stalin madurai ops admk o'panneerselvam
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe