Advertisment

'அண்ணா, எம்ஜிஆரின் கொள்கைகளை விஜய் மட்டும் தான் நிறைவேற்ற முடியும்' -ஆதவ் அர்ஜுனா பேச்சு

a4947

adhav arjuna Photograph: (tvk)

மதுரை மாவட்டம் பாரபத்தி கிராமத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் 2வது மாநில மாநாடு இன்று (21.08.2025) தொடங்கி நடைபெற்று வருகிறது. உள்ளது. சுமார் 216 மீட்டர் நீளம், 60 அடி அகலத்தில் மாநாட்டு மேடை அமைக்கப்பட்டு அக்கட்சி நிர்வாகிகள், முன்னணி தலைவர்கள் அமர்வதற்கு 200 இருக்கைகள் போடப்பட்டுள்ளன. சுமார் 2.5 லட்சத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் பங்கேற்றுள்ள இந்த மாநாடு இரவு 7 மணிவரை நடைபெற உள்ளது.
Advertisment
இதற்கிடையே மாநாட்டுக்கான நிகழ்ச்சி நிரல் வெளியாகியது. அதன்படி தொண்டர்கள் உற்சாகமாக பல்வேறு முழக்கங்களை எழுப்பி வருகின்றனர். தொடர்ந்து  “உங்கள் விஜய்.... நான் வரேன்.... ” என்ற பாடலுடன் மேடைக்கு வந்த விஜய் அவரது பெற்றோர் மற்றும் நிர்வாகிகளிடம் வாழ்த்துகளைப் பெற்றுக் கொண்டு தொண்டர்கள் மத்தியில் ரேம்ப் வாக் மேற்கொண்டார். அச்சமயத்தில்  விஜயை நெருங்கி வந்த  தொண்டர்களை அருகில் இருந்த பாதுகாவலர்கள் தடுத்து நிறுத்தினர். அதனைத் தொடர்ந்து கொள்கைப் பாடலும், கொடி பாடலும் வெளியிடப்பட உள்ளது.
Advertisment
அதன் பிறகு கட்சிக் கொடி ஏற்றி வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து வரவேற்புரையும் மாநாடு முறைப்படி தொடங்கியது. இந்த மாநாட்டு மேடையில் கட்சியின் விஜயின் பெற்றோரான எஸ்.ஏ.சந்திரசேகர் - சோபாவுக்கு இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது.  தொடர்ந்து தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் உரையாற்றி வருகின்றனர்.
கட்சியின் தேர்தல் பரப்புரை செயலாளர்  ஆதவ் அர்ஜுனா பேசுகையில்,  ''1977 மிகப்பெரிய அரசியல் வெற்றியை எம்ஜிஆர் பெற்றார். அண்ணா அவர்களுடைய குறிக்கோளை கலைஞர் தன்னுடைய குடும்பத்திற்காகவும், தன்னுடைய ஊழலுக்கவும் திமுக கட்சியை மாற்றிய பொழுது எம்ஜிஆர் உருவானார். இன்றைக்கு தமிழகத்தை ஆண்டு கொண்டிருக்கின்ற மு.க.ஸ்டாலின் தன்னுடைய தந்தையிடம் இருந்து ஒரு பாடத்தை கற்றுக் கொண்டார். என்ன பாடம் என்றால். கலைஞர்  தன்னை சுற்றி இருக்கக்கூடிய 10 குடும்பங்களுக்கு ஒரு மிகப்பெரிய ஊழல் சாம்ராஜ்யம் உருவாக்கினார். ஆனால் இன்று தமிழக முதல்வர் அந்த 10 குடும்பத்தை ஒழித்து விட்டு தன்னுடைய தன்னுடைய மருமகன் தன்னுடைய மகன் என்கின்ற ஒரு குடும்பமாக ஊழலை உருவாக்கி உள்ளார்.

சமூக நீதியை மறந்து தமிழகத்தில் முதன் முதலில் ஒரு சமூக நீதிக்காக ஒரு சட்டம் கொண்டு வந்தார்கள். ஆனால் இங்கு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மாட்டார்கள். ஏனென்றால் அதுதான் பிஜேபியின் உறவு. அதன் பிறகு  முதல்வர் சமூகநீதியை மறந்தார். சாதி அரசியலை உருவாக்கினார். ஊழலை உருவாக்கினார். இன்று மதுரை மண்ணில் இருக்கக்கூடிய அமைச்சர் மூர்த்தி இந்த மாநாட்டிற்கு எத்தனை தடைகளை உருவாக்கினார் தெரியுமா? அத்தனை தடைகளையும் உடைத்து இங்கு இருக்க கூட்டம் தான் நமது தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்டம்.
மூர்த்தி என்ன சமூக நீதி காவலரா? என்றைக்கோ திமுகவின் உடைய அண்ணவின் குறிக்கோளிலிருந்து திமுக விலகி விட்டது. யார் அண்ணா உடைய கொள்கைகளை இன்றைக்கு கடைபிடிக்க முடியும் நிர்வாகத்தில் கொண்டு வர முடியும். ஒரே தலைவர் விஜய் தான்.  எல்லோரும் சொல்லலாம் திமுகவிற்கும் தமிழக வெற்றி கழகத்திற்கும் கொள்கை ஒன்றுதான். அறிஞர் அண்ணாவும், எம்ஜிஆரும் ஏழ்மையை ஒழிக்கணும் , சமத்துவத்தை உருவாக்கணும் என்று கட்சியை ஆரம்பித்தார்கள்.
இன்று அதிமுக என்ன நிலைமையில் இருக்கிறது. அண்ணாவின் குறிக்கோளிலிருந்து மு.க.ஸ்டாலின் விலகிவிட்டார். ஆனால் எம்ஜிஆர் உருவாக்கிய கொள்கை அதை வழி நடத்திய ஜெயலலிதாவின் கொள்கையில் இருந்து தடம் மாறி இன்று பிஜேபியுடன் உறவு வைத்துக் கொண்டு தமிழகத்தில் பிஜேபியை பின்புற வாசல் வழியாக அதிகாரத்தை அடைவதற்கு அதிமுக இன்றைய தலைமை எல்லா முயற்சிகளும் செய்து கொண்டிருக்கிறது. நாங்கள் உறுதியாகக் கூறுகிறோம் அண்ணாவின் கொள்கைகளையும், எம்ஜிஆர் கொள்கைகளையும் உள்வாங்கி அது அரசியல் வெற்றியாக மாற்ற 2026 மிகப்பெரிய இளைஞர் புரட்சியை உருவாக்கி விஜய் முதல்வராக வருவார்'' என்றார்.
Conference madurai tvk vijay
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe