நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த ஜனவரி மாதம் 28ஆம் தேதி (28.01.2026) காலை 11 மணியளவில் தொடங்கியது. இத்தகைய சூழலில் தான் பட்ஜெட் தாக்கலுக்கு முன்னதாக நிதி அமைச்சக செயலாளர்களுடன் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்வுவை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (01.02.2026) காலை சந்தித்து பேசினார். அப்போது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இனிப்பு வழங்கி ஊட்டிவிட்டார்.
இதனையடுத்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் குழு 2026-27ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டிற்கு ஒப்புதல் வழங்கியது. அதனைத் தொடர்ந்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய பட்ஜெட்டை காலை 11 மணியளவில் நாடாளுமன்ற மக்களவையில் தொடர்ந்து 9வது முறையாக தாக்கல் செய்து உரையாற்றினார். அதில் தமிழ்நாட்டுக்கான அறிவிப்புகளை பொறுத்த வரையில், “பொதிகை மலையில் சுற்றுச்சூழலுக்கு உகந்த மலையேற்ற திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும். பழவேற்காடு ஏரியில் பறவை கண்காணிப்பு மையம் அமைக்கப்படும்.
ஐதராபாத் - சென்னை, சென்னை - பெங்களூர் இடையே அதிவிரைவு ரயில் தடம் உருவாக்கப்படும். தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் கலாச்சார மையம் அமைக்கப்படும். தமிழ்நாட்டில் அரியவகை கனிமங்களுக்கான வழித்தடத் திட்டம் உருவாக்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் மத்திய பட்ஜெட் குறித்து தமிழக நிதித்துறை அமைச்சர் தஙகம் தென்னரசு வெளியிட்டுள்ள மு.க. ஸ்டாலின் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “2026 ஒன்றிய பட்ஜெட் தமிழ்நாட்டு மக்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/02/01/tn-govt-2026-02-01-15-20-06.jpg)
மாநிலத்தின் அடிப்படை வளர்ச்சிக்கான தேவைகள், வேலைவாய்ப்பு, கல்வி, சுகாதாரம், தொழில்துறை முதலீடு போன்ற முக்கிய துறைகளுக்கு எந்தத் தெளிவான அறிவிப்புகளும் இடம்பெறவில்லை. பல ஆண்டுகளாக தமிழ் மக்கள் முன்வைக்கும் நியாயமான கோரிக்கைகள் மீண்டும் புறக்கணிக்கப்பட்டுள்ளன. இந்திய நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றும் தமிழ்நாட்டிற்கு உரிய பங்கீடு வழங்கப்படவில்லை. இது தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகளை முற்றிலும் புறக்கணித்த பட்ஜெட்டாகவே உள்ளது. மாற்றத்தை நோக்கியிருந்த மக்களுக்கு கிடைத்திருப்பது ஏமாற்றம் மட்டுமே” எனக் குறிப்பிட்டுள்ளார்.
Follow Us