'ஓரணியில் தமிழ்நாடு' எனும் மூவ்மெண்ட்டை கடந்த 2-ந் தேதி தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின். இதையடுத்து அனைத்து அமைச்சர்கள் தொடங்கி திமுக நிர்வாகிகள் அனைவரும் உறுப்பினர்களை சேர்ப்பதற்காக டோர் டூ டோர் பிரச்சாரத்தில் இறங்கி சேர்த்து வருகின்றனர். ஓரணியில் தமிழ்நாடு எனும் இந்த மூவ்மெண்ட்டில் இதுவரை பல லட்சம் பேர் உறுப்பினராகி இருக்கிறார்கள் என திமுக தரப்பில் சொல்லப்படுகிறது.

இந்நிலையில், உறுப்பினர் சேர்க்கை எந்தளவில் இருக்கிறது என்பதை தினமும் ஆய்வு நடத்தி வருகிறார் ஸ்டாலின். உறுப்பினர் சேர்க்கையின் பொறுப்பாளர்களிடம் நேரடியாக ஃபோன் மூலம் தொடர்பு கொண்டு ஆய்வு நடத்துவதுடன் பல்வேறு கேள்விகளைக் கேட்டு திணறடித்து வருகிறார் முதல்வர். அப்போது, உளவுத்துறையும், பென் அமைப்பும் தந்த ரிப்போர்ட்டுகளை வைத்துக் கொண்டு திமுக அமைச்சர்களிடமும், நிர்வாகிகளிடமும் கேள்வி எழுப்புகிறார். இதனால், முதல்வரை ஏமாற்றிட முடியாது என்று சீரியஷாக  இந்த பணியில் கவனம் செலுத்தி வருகின்றனர் திமுகவினர். பரபரப்பாக வேகமெடுத்து வருகிறது ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை.