One person seriously injured after being bitten by a stray dog; tension in Thiruverkadu Photograph: (dog)
நாடு முழுவதும் நாய்க்கடி சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் தெருநாய்களால் மற்றும் வளர்ப்பு நாய்களால் பொதுமக்கள் கடிபடும் சம்பவங்களின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அதிலும் குறிப்பாக குழந்தைகள் மற்றும் சிறார்களை நாய்கள் கடிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் சென்னை திருவேற்காடு பகுதியில் தெருநாய் கடித்து ஒருவர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சென்னை திருவேற்காடு ஈஸ்வரி நகர் பகுதியில் வடிவேலு என்பவர் இருசக்கர வாகனத்தில் டீகடைக்கு சென்ற நிலையில் அந்த பகுதியில் சுற்றித்திரிந்த தெருநாய் ஒன்று கடித்துக் குதறியுள்ளது. அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் தடுக்க முயன்றும் விடாமல் வடிவேலுவை நாய் கடித்துக் குதறியுள்ளது. பின்னர் அவர் மீட்கப்பட்டு உடனடியாக ஆவடி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.