திருவண்ணாமலையில் திமுக இளைஞரணி வடக்கு மண்டல மாநாடு நேற்று (14.12.2025)  நடைபெற்றது. தமிழக முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

Advertisment

இந்த கூட்டத்திற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து பேருந்துகள் மற்றும் வாகனங்கள் மூலம் திமுகவினர் திருவண்ணாமலை நோக்கி படையெடுத்து குவிந்திருந்தனர். இந்த நிலையில் சிறுநாத்தூர் என்ற பகுதியில் திமுகவினரின் வாகனம் மோதி ஒருவர் 200 மீட்டர் தூரத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்த சம்பவம் இரவில் பரபரப்பை ஏற்படுத்தியது. இறந்தவரின் உடலைப் பார்த்து குடும்பத்தினர் கதறி அழுதனர். உடனடியாக அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் உயிரிழப்புக்கு காரணமானவர்களை கைது செய்யும்படி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு குவிந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தடியடி நடத்தி துரத்தித் துரத்தி கைது செய்தனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisment