One person lose after being hit by a bike driven by a school student - Police investigating Photograph: (police)
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே சீனாபுரம், வீராணம்பாளையம், புதுப்பகுதியைச் சேர்ந்தவர் குமாரசாமி (63). ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர். நேற்று மாலை அந்தியூர் அடுத்த குருநாதர் சுவாமி கோவில் வனப்பகுதியில் உள்ள உறுப்பினர் வீட்டுக்கு தனது மோட்டார் சைக்கிளில் குமாரசாமி சென்றார்.
அப்போது அந்தப் பகுதியில் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு சாலையோரம் உள்ள விநாயகர் கோவில் நோக்கிச் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மற்றொரு மோட்டார் சைக்கிளில் பிளஸ்-2 மாணவன் வந்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அந்த மாணவன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் குமாரசாமி மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர் ஏற்கனவே குமாரசாமி இறந்து விட்டதாகக் கூறினர். இந்த விபத்து குறித்து அந்தியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Follow Us