Advertisment

இரு மூதாட்டிகள் கொலை செய்யப்பட்ட வழக்கு; ஒருவர் துப்பாக்கியால் சுட்டுப் பிடிப்பு!

slm-old-wonen-ins

மூதாட்டிகள் கொலை செய்யப்பட்ட நிலையில்  ஒருவரை போலீசார் அதிரடியாகச் சுட்டு பிடிக்கப்பட்ட சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Advertisment

சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே  உள்ள இடங்கணசாலை நகராட்சிக்கு உட்பட்ட தூதனூர் பகுதியில் கூலித் தொழிலாளிகளான பாவாய் (வயது 70) மற்றும் பெரியம்மாள் (வயது 75) ஆகிய இரு மூதாட்டிகள் வசித்து வந்தனர். இத்தகைய சூழலில் தான் அப்பகுதியில் உள்ள கல்குவாரியில் இவர்கள் இருவரும் சடலமாகக் கடந்த 4ஆம் தேதி (04.11.2025) போலீசார் கண்டெடுத்தனர். அதன்பின்னர் அவர்களது சடலத்தைப் பிரேதப் பரிசோதனைக்குச் சேலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து மகுடஞ்சாவடி போலீசார் இது குறித்து வழக்குப் பதிவு செய்தனர். 

Advertisment

அதோடு 3 தனிப்படைகள் அமைத்து இந்த சம்பவத்திற்குக் காரணமான மர்ம நபரைத் தீவிரமாகத் தேடி வந்தனர். இதற்கிடையே மூதாட்டிகள் நகைக்காகக் கொலை செய்யப்பட்டது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இந்நிலையில் சங்ககிரி அருகே உள்ள ஒருக்காமலை பகுதியில் இன்று (07.11.2025) சேலம் கருப்பூர் பகுதியைச் சேர்ந்த ஐயனார் என்பவரைக் காலில் சுட்டுப் பிடித்தனர். இதனையடுத்து அவரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் போலீசார் அனுமதித்துள்ளனர். அதே சமயம் அவரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் 

police old women incident sangakiri Salem
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe