நடப்பாண்டு தீபாவளியானது வார இறுதியின் தொடர்ச்சியாக வரும் திங்கட்கிழமை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதற்காக வெள்ளிக்கிழமை (இன்று) மாலையிலிருந்தே பலரும் சொந்த ஊர்களை நோக்கி படையெடுக்க தொடங்கியுள்ளனர்.

Advertisment

தமிழக அரசு சார்பில் சென்னை, கோவை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து சொந்தவூர் செல்ல சிறப்புப் பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் தெற்கு ரயில்வே சார்பில் ஐந்து சிறப்பு ரயில்கள் விடப்பட்டுள்ளன.

Advertisment

வார இறுதி நாட்களான சனி, ஞாயிறு மற்றும் தீபாவளி நாளான திங்கள் ஆகிய மூன்று நாட்கள் ஏற்கனவே விடுமுறை இருந்த நிலையில் சொந்த ஊர் திரும்பியவர்கள் மீண்டும் பணி செய்யும் இடங்களுக்கு திரும்ப ஏதுவாக அக்டோபர் 21ஆம் தேதி செவ்வாய்க்கிழமையும் விடுமுறை நாளாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக முழுவதும் அரசு அலுவலகங்கள் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அக்டோபர் 21ம் தேதியும் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய விடுமுறையை ஈடு செய்யும்  வகையில் அக்.25 ஆம் தேதி அலுவலகங்கள்,பள்ளி, கல்லூரிகள் செயல்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.