சர்க்கரை ஆலையில் இயந்திரம் வெடித்துச் சிதறி ஏற்பட்ட விபத்தில் ஊழியர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே செம்மேடு பகுதியில் சர்க்கரை ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. தினம்தோறும் விவசாயிகளால் அனுப்பி வைக்கப்படும் கரும்புகள் கொண்டு சர்க்கரை உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இன்று வழக்கம்போல பணிகள் நடைபெற்று வந்த நிலையில் கரும்பை அரவை செய்யும் இயந்திரத்தின் சென்ட்ரல் பியூஸ் பகுதி திடீரென வெடித்துச் சிதறி விபத்து ஏற்பட்டது.
அப்போது பறந்து வந்த கரும்பு அரவை இயந்திரத்தின் ஒரு பகுதி அங்கு பணியாற்றிக்கொண்டிருந்த புருஷோத்தமன் என்ற ஊழியரின் தலையில் மோதியது. காயத்துடன் மீட்கப்பட்ட புருஷோத்தமன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் பாதி வழியில் உயிரிழந்தார். தொடர்ந்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் சம்பந்தப்பட்ட சர்க்கரை ஆலையில் ஏற்பட்ட விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.