Advertisment

பள்ளி பேருந்தின் சக்கரத்தில் சிக்கி குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு!

siren-police

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே கிருஷ்ணாபுரம் என்ற பகுதி அமைந்துள்ளது. இங்குப் பள்ளி பேருந்தின் சக்கரத்தில் குருசரந்த் என்ற ஒன்றை வயதுக் குழந்தை சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த குழந்தையின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர்.  மேலும் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  பள்ளி பேருந்தின் சக்கரத்தில் சிக்கி குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதி பொதுமக்கள் மத்தியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

முன்னதாக வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே தனியார்ப் பள்ளி பேருந்து சக்கரத்தில் சிக்கி ஒன்றரை வயதுக் குழந்தை கடந்த 10ஆம் தேதி உயிரிழந்தது. வீட்டுக்கு முன்பு விளையாடிக் கொண்டிருந்த குழந்தை,  பள்ளி பேருந்தின் சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தது. இதனையடுத்து பள்ளிப் பேருந்தைச் சிறை பிடித்த பொதுமக்கள் காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டது  குறிப்பிடத்தக்கது.

Advertisment
child incident school van Tiruppattur vaniyambadi
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe