'On whose orders was that life taken' - Interview with T.T.V. Dinakaran Photograph: (tvv)
'திருப்புவனம் சம்பவம் அரசாங்கத்தின் தோல்வியாக தான் இதைப் பார்க்க முடிகிறது' என டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அம்மா மக்கள் முன்னேற்றக் கழக கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் பேசுகையில், ''யாருடைய அழுத்தத்தில் ஒரு இளைஞரை அடித்து கொலை செய்திருக்கிறார்கள். நீதிமன்றம் எப்படி கண்டனம் தெரிவித்திருக்கிறது. மிகவும் வருந்தத்தக்க ஒரு நிகழ்வாக இந்த நிகழ்வு தமிழ்நாடு முழுவதும் இந்த ஆட்சி மீதும் காவல்துறையின் நடவடிக்கை மீதும் மக்களுக்கு நம்பிக்கை இன்மையை உருவாக்கி இருக்கிறது.
அரசாங்கத்தின் தோல்வியாக தான் இதைப் பார்க்க முடிகிறது. சமூக வலைத்தளங்களில் நீதி அரசர்கள் எப்படி எல்லாம் கேள்வி கேட்டார்கள் அதற்கு இந்த அரசாங்கம் பதில் சொல்ல முடியாமல் எப்படி எல்லாம் தலைகுனிந்து நிற்கிறார்கள் என்பதை பார்க்கும் பொழுது நல்லவேளை நீதிதேவதைகள் இருப்பதால்தான் இன்று மக்களுக்கு ஓரளவு நம்பிக்கையோடு வாழ முடிகிற சூழல் இருக்கிறது. இந்த தாக்குதல் சம்பவம் கடுமையான கண்டனத்திற்குரியது.
யாரின் உத்தரவின் பேரில் அந்த உயிர் பறிக்கப்பட்டு இருக்கிறது என்பதை இந்த அரசாங்கம் விரைவாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதான் என்னுடைய கோரிக்கை'' என்றார்.
அப்பொழுது செய்தியாளர் ஒருவர் 'அதிமுக-பாஜக கூட்டணியில் மாற்றி மாற்றிப் பேசுகிறார்கள். யார் முதல்வர் வேட்பாளர் என்றே தெரியவில்லை' என்ற கேள்விக்கு ''திமுக கூட்டணியில் சிபிஎம் சண்முகம் என்ன பேசுகிறார். தேர்தலுக்கு முன்பு ஸ்டாலின் சொன்ன வாக்குறுதிகளை எல்லாம் நிறைவேற்றினால் தான் மக்களை தைரியமாக சந்திக்க முடியும் என்று சொல்கிறார். திருமாவளவன் தினமும் ஒரு கருத்தைச் சொல்லிக் கொண்டிருக்கிறார். அதை விட்டுவிட்டு ஆட்சிக்கு எதிராக, தமிழ்நாடு மக்கள் நம்பக்கூடிய கூட்டணியாக உருவாகிக் கொண்டிருக்கும் எங்கள் கூட்டணியில் தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்த தவறான கருத்தைப் பரப்புவது போல் இருக்கிறது'' என்றார்.