Advertisment

'இன்று முதல் ஆம்னி பேருந்துகள் ஓடாது'-பயணிகள் தவிப்பு

a5713

Omni buses will not run today - passengers are worried Photograph: (omni bus)

இன்று (10/11/2025) முதல் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களுக்கிடையே ஆம்னி பேருந்துகள் இயங்காது என ஏற்கனவே ஆம்னி பேருந்து ஓட்டுநர்கள் சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்ட நிலையில் அந்த அறிவிப்பு இன்று நடைமுறைக்கு வந்துள்ளது. 

Advertisment

கேரள மற்றும் கர்நாடக மாநில ஆம்னி பேருந்துகள் 'ஆல் இந்தியா பர்மிட்' முறையில் பிற மாநில வாகனங்களுக்கு உரிமம் பெற்று தமிழ்நாட்டிற்குள் ஆம்னி பேருந்துகளை இயக்கினாலும் தனிப்பட்ட முறையில் தமிழ்நாடு அரசுக்கு வரி செலுத்த வேண்டும் என்ற முடிவை தமிழக அரசு எடுத்ததன் காரணமாக கேரள அரசும், கர்நாடக அரசும் அதேபோன்ற முடிவை எடுத்து தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆம்னி பேருந்துகளுக்கு கூடுதல் வரி விதித்துள்ளனர்.

Advertisment

அதன்படி கர்நாடகா, கேரளா மாநிலங்களுக்கு ஆம்னி பேருந்துகளை இயக்க வேண்டுமெனில் மூன்று மாதத்திற்கு கிட்டத்தட்ட நான்கு லட்சம் ரூபாய் வரி செலுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, புதுச்சேரி ஆகிய நான்கு மாநிலங்களில் உள்ள ஆம்னி பேருந்துகள் சங்கத்தினரும் ஒட்டுமொத்தமாக ஆம்னி பேருந்துகளை இயக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.  இதற்கான நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காக பேருந்துகளை இயக்காமல் நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளனர். இதனால் மூன்று மாநிலங்களிலும் பயணிகள் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 

karnataka Kerala omni bus Tamilnadu
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe