ஆம்னி பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் 17 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

கர்நாடகா மாநிலம், பெருங்களூரில் இருந்து 200 கி.மீ தொலைவில் உள்ள சித்ரதுர்கா என்ற இடத்தில் படுக்கை வசதி கொண்ட ஆம்னி பேருந்து ஒன்று நேற்று நள்ளிரவில்சென்று கொண்டிருந்தது. அப்போது அங்கு வந்த ஒரு லாரி, தனது கட்டுப்பாட்டை இழந்து தடுப்பை தாண்டி எதிர்புறம் சென்ற ஆம்னி பேருந்து மீதி மோதி விபத்தானது.

Advertisment

இந்த விபத்தில், 17 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.