தொழிலதிபரும், பாஜக எம்.பி.யும்மான நவீன் ஜிந்தாலின் மகளின் பிரம்மாண்ட திருமணம் கடந்த 5ஆம் தேதி (05.12.2025) டெல்லியில் நடைபெற்றது. இதற்கு முந்தைய நாள் (04.12.2025) இரவு திருமண வரவேற்பின் போது இசைக் கச்சேரி நடைபெற்றது. இதில் பல்வேறு அரசியல் கட்சியினரும் கலந்து கொண்டனர்.
அந்த வகையில் திருமண கொண்டாட்டத்தின் போது பாஜக எம்பி கங்கனா ரனாவத், திர்னாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா மற்றும் தேசியவாத காங்கிரஸ் (எஸ்பி) எம்பி சுப்ரியா சுலே ஆகியோர் பாலிவுட்டில் பிரபலமான 'ஓ..' திரைப்படத்தின் பாடலுக்கு நடனமாடினர்.
இந்நிலையில் இந்த நடன நிகழ்ச்சி தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகியது. பல வி.வி.ஐ.பி.க்கள் கலந்துகொண்ட இந்த ஆடம்பரமான திருமண விழாவில், அரசியல்வாதிகள் உற்சாகமாக நடனமாடியது அங்குள்ளவர்களை மேலும் மகிழ்ச்சியாக்கியது. அதே சமய்ம் நவீன் ஜிந்தால் எம்.பி., தனது சகோதரர்களுடன் பிரபல பாலிவுட் பாடலுக்கு நடனமாடும் புதிய வீடியோவும் வெளியாகி வைரலாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Follow Us